புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 06, 2022)

வாழ்வை அழுத்தும் சூழ்நிலைகள்

ரோமர் 8:37

இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்பு கூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.


தன் குடும்பத்திலும், சமுகத்திலும், தனது நாட்டிலும், உலகத்திலும் நடக்கும் சம்பவங்களை குறித்து ஆராய்ந்து பார்த்த மனிதனொருவன், மனம் சலித்துப் போனான். ஏன் உலகிலே இப்படியான குழப்பங்கள், ஏன் வாழ்க்கையிலே இத்தனை சவால்கள் என்று எழுந்த பல கேள்விகள் அவன் மனதை தினமும் அழுத்திக் கொண்டிருந்தது. இதைக் அவதானித்த, அவனது தந்தையார், ஒரு நாள் அவனை அழைத்து அவனோடே பேசினார். அப்போது அவர் மகனே, இந்த உலகத்திலே பலவிதமான சம்பங்கள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது. அவற்றில் சில நம்முடைய கட் டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவைகள், ஒரு சிலவோ நம்முடைய கட்டுப்பா ட்டிற்குள் இருக்கின்றது. சில சம்பவ ங்கள் நம்முடைய வாழ்க்கையை குறித்ததாக இருக்கின்றது ஆனால் வேறு சில சம்பவங்கள் மற்றவர்கடைய வாழ்க்கையை குறித்ததாக இருக்கின்றது. ஒருவேளை உன் மனைவி பிள்ளைகள் உன் கட்டுப்பா ட்டிற்குள் இருக்கின்றார்கள் என்று நீ நினைக்கலாம், அது ஒரு அள விற்கு உண்மையாகக்கூட இருக்கலாம், ஆனால் ஒவ்வொரு மனிதனுடைய மனத்தையும், அதிலுள்ள யோசனைகளை யும், ஆசை இச்சைகளையும் உன்னால் அடக்க முடியாது. நாம் நம்மு டைய வாழ்க்கையிலே, பலவி தமான சந்தர்பங்களை கடந்து செல்கின்றோம். இன்பத்தின் நாட்கள், துன்பத்தின் நாட்கள், உயர்வான நாட் கள், தாழ்வான நாட்கள், பாவம் செய்து குறுகிப் போயிருக்கும் நாட் கள். இப்படியாக பலவிதமான நாட்களை கடந்து செல்லும் போது, உலகமோ, மனிதர்களோ, சூழ்நிலைகளோ உன் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதிருக்கும் போது, அவைகள் ஒவ்வொன்றையும் எப்படி நீ வெற்றியின் நாட்களாக மாற்றிக் கொள்ளக் கூடும்? நீ உன் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும், உன் மனதின் யோசனைகளையும்;, உன்னை அழுத்தும் பாரங்களையும் ஆண்டவராகிய இயேசுவின் பாதத்தில்; இறக்கி வைத்துவிடு. அதாவது, நம் வாழ்வை நோக்கும் எந்த சூழ்நிலைகளிலும் தேவ சித்தம் நிறைவேற நம்மை அவரிடம் ஒப்புக் கொடுக்கும் போது, நாம் நம் ஒவ் வொரு சூழ்நிலைகளையும் ஜெயங் கொள்கின்றவர்களாக இருப்போம் என்று அறிவுரை கூறினார். பிரியமானவர்களே, நீங்கள் எந்த சூழ்நிலையிலிருந்தாலும் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருப்பவைகளை உங்கள் தேவனிடத்தில் ஒப்புக் கொடுங்கள். அவர் மிகுதியானவற்றைப் பார்த்துக் கொள்வார்.

ஜெபம்:

நீதியின் பாதையில் நடத்தும் தேவனே, இக்கட்டும் நெருக்கமும் என்னைப் பிடித்துக் கொள்ளும் போது, உம்டைய நீதியை நிறைவேற்றும்படிக்கு, சத்திய வேதத்தின வழியிலே நடந்து கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 16:33