புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 05, 2022)

கர்த்தர் யுத்தம் செய்வார்

சங்கீதம் 27:3

எனக்கு விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும், என் இருதயம் பயப்படாது;


எசேக்கியா ராஜா யூத ராஜ்யத்தை அரசாண்ட நாட்களிலே, அசீரியாவின் ராஜா தன்னுடைய பெருஞ் சேனைகளை யூத ராஜயத்திற்கு விரோமாக அனுப்பி, அங்கிருந்த ஜனங்கள் திகிலடையும்படியான வார்த்தை களை கூறினான். நீங்கள் நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன? கர் த்தர் நம்மைத் தப்புவிப்பார் என்று உங்களைப் போதனை செய்த எசே க்கியாவுக்குச் செவிகொடாதிருங் கள்; ஜாதிகளுடைய தேவர்களில் யாராவது தங்கள் தேசத்தை அசீ ரியா ராஜாவின் கைக்கு தப்புவித்ததுண்டோ? என்று நெருக்கமும், கண்டிதமும், தூஷணமுமான வார் த்தைகளை தேவனுடைய ஜனங்க ளின் காதுகள் கேட்க உரத்த சத்தமாக பேசி. தேவனையும் அவருடைய ஜனங்களையும் நிந்தித்தான். அப்போது எசேக்கியா ராஜா கர்த்தரை நோக்கி: சேனைகளின் கர்த்தாவே, கேருபீன்களின் மத்தியில் வாசம்ப ண்ணுகிற இஸ்ரவேலின் தேவனே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்க ளுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டா க்கினீர். கர்த்தாவே, அசீரியா ராஜாக்கள் அநேக ஜாதிகளையும், அவர் கள் தேசத்தையும் நாசமாக்கி, அவர்களுடைய தேவர்களை நெருப் பிலே போட்டுவிட்டது மெய்தான்; அவைகள் தேவர்கள் அல்லவே, அவை மனுஷர் கைவேலையான மரமும் கல்லுந்தானே. ஆகையால் அவை களை அழித்துப் போட்டார்கள். இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த் தாவே, நீர் ஒருவரே கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்களெல்லாம் அறியு ம்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண் ணப்பம்ப ண்ணினான். அப்பொழுது கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம் பேரைச் சங்கரி த்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்களெல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள். அசீரியா ராஜாவாகிய சனகெரிப் திரும்பி தன் தேசத்திற்கு போய், தலைநகராகிய நினிவே பட்டண த்தில், தன் விக்கிரகக் கோவிலிலே இருக்கும் போது, சொந்த குமாரர் கள் அவனை கொன்று போட்டார்கள். பிரியமானவர்களே, கர்த்தர் நம் முடைய வெளிச்சமும் நம்முடைய இரட்சிப்புமானவர், எனவே நாம் பய ப்படத் தேவையில்லை. கர்த்தர் நம் ஜீவனின் பெலனானவர், யாருக்கும் அஞ்சத் தேவையில்லை. நமக்கு விரோதமான பெருஞ் சேனைகள் படை யெடுக்கும் போதும், தேவனாகிய கர்த்தரே நமக்காக யுத்தம் செய்கின் றவராயிருக்கின்றார். நம் கர்த்தரில் நாம் நம்பிக்கையாயிருப்போம்.

ஜெபம்:

ஜீவனுள்ள தேவனே, மனிதர்கள் பெருமையான வார்த்தைகளை பேசும் போது, நான் என்னை உம் சமுகத்திலே தாழ்த்தி, சர்வ வல்லவராகிய உம்முடைய நிழலிலே தங்கியிருக்கும்படி என்னை நீர் வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 37:29