புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 03, 2022)

பஞ்ச காலத்தின் ஆதாரம்

சங்கீதம் 23:2

அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர் ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்.


எலியா என்ற தேவனுடைய ஊழியக்காரனுடைய நாட்களிலே, இஸ்ர வேல் தேசத்திலே கொடிய பஞ்சம் உண்டாயிற்று. தேசத்தில் மழை பெய்யாதபடியினால், ஆறுகளும் வற்றிப்போயிற்று. கர்த்தர் எலியாவை நோக்கி: நீ எழுந்து, சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட் டளையிட்டேன் என்றார். எலியா அங்கே சென்ற போது, அந்த ஊரிலே, பானையில் ஒரு பிடி மாவும் கலயத்தில் கொஞ்சம் எண் ணெயுடன் தனக்கும் தன்னுடைய குமாரனுக்கும் கடைசி ஆகாரத்தை ஆயத்தப்படுத்துகின்ற ஒரு வித வையை அவன் சந்தித்தான். அப் பொழுது எலியா அவளைப் பார் த்து: பயப்படாதே நீ போய் உன் வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து; ஆனாலும் முதல் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டுவா, பின்பு உனக்கும் உன் குமாரனுக்கும் பண் ணலாம். கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்துபோவதும் இல்லை. கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அவள் போய், எலியாவின் சொற்படி செய் தாள்; அவளும், இவனும், அவள் வீட்டாரும் அநேகநாள் சாப்பிட்டார்கள். கர்த்தர் எலியாவைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, பானை யிலே மா செலவழிந்துபோகவும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோகவும் இல்லை. ஒரு ஏழை விதவையை கொண்டு, தேவ மனுஷனாகிய எலியாவை தேவன் போஷpத்தார். அதே வேளையிலே தேவ மனுஷனைக் கொண்டு, பஞ்சகாலத்திலே ஏழை விதைவையை போஷpத்தார். பிரியமானவர்களே, இருப்பில் இருப்பதை பார்த்து சோர் ந்து போகாமல், இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழை க்கிறவருமாயிருக்கிற தேவனாகிய கர்த்தரை நோக்கிப் பாருங்கள். கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார் நான் தாழ்ச்சியடையேன் என்று தினமும் அறிக்கை செய்யுங்கள். நல்ல மேய்ப்பனாகிய அவர் எங்கள் ஆத்தும தேவைகளை மட்டுமல்ல, நம்முடைய சரீர தேவைகளை சந்தி க்கின்றவராக இருக்கின்றார். வேதத்திலுள்ள அதிசயங்கள் எல்லாம் ஒரு காலத்திலே நடந்தது என்று எண்ணாமல், இருக்கின்றவராக இருக்கின்ற ஜீவனுள்ள தேவனை நோக்கிப் பாருங்கள். அவர் இப்போதும் எப்போதும் அதிசயம் செய்யும் தேவனாயிருக்கின்றார்.

ஜெபம்:

உம்முடைய நீதிமான்கள் பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள் என்று கூறிய தேவனேஇ நான் என் சூழ்நிலைகளைக் கண்டு பயப்படாமல் உம்முடைய நீதியின் வழியிலே நடக்க என்னை பெலப் படுத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 37:25