புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 02, 2022)

வறட்சியான காலம்

எரேமியா 17:7

கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.


வெய்யிலின் உஷ்ணம் அதிகமாக இருந்தது, செல்லும் பாதையோ அவாந்தர வழியாக இருக்கின்றது. கண்களுக்கு எட்டின தூரத்திலே எந்த மனித குடியிருப்புக்களும் தென்படவில்லை. இவ்வண்ணமாக, ஒரு தகப்பனானவர், வாலிப பிராயத்தையடைவிருக்கும்; தன் மகனின் எதிர்கால வாழ்வைக் கருதி, தூர தேசமொன்றி ற்கு சென்று கொண்டிருந்தார். மகனா னவனின் எண்ணமோ: ஏன் மற்றவ ர்கள் இருப்பதைப் போல அருகிலு ள்ள ஊரொன்றிலே நாம்; குடியேறி வாழக்கூடாது? இன்னும் அநேக நாட் கள் நாம் ஏன் பிரயாணப்பட வேண்டும், உண் பதற்கும், குடிப்பதற்கும் என்ன செய்வோம்? உடுப்பதற்கும், உறங் குவதற்கும் எங்கு செல்வோம்? என்ற கேள்விகள் அவனிடம் இருந்தது. தகப்பனானவரின் உள்ளத்திலோ: தன் மகனானவன், பாதிவழியிலே தன் நம்பிக்கையை இழந்து, சென்றடைய வேண்டிய செழிப்பான தேசத்தின் நோக்கத்தை இழந்து, வயிற்றப் பிழைப்புக்காக, இப்போது எதை உண்போம், எதைக் குடிப்போம், எதை உடுப்போம், எங்கு தங் குவோம் என்ற கவலையடைந்து, அவைகளை நாடி, பின்னிட்டு போகு ம்படிக்காய், அவன் தன் மனதை மாற்றிக் கொள்ளக்கூடாது என்பதே அவருடைய ஏக்கமாக இருந்தது. பிரியமான சகோதர சகோதரிகளே, நாமும் இந்நாட்களிலே, ஆன்மீக வறட்சியான நாட்களையே கடந்து சென்று கொண்டிருகின்றோம். அதே வேளையிலே, இந்த உலத்தில் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளின் கவலை மனிதர்களை அதி கம் அழுத்துவதால், அவைகளினாலே, மிகவும் பாரமடைந்து, ஆன்மீக தேவை களை குறித்த எண்ணமற்றவர்களாக, வாழ்வின் மேன்மையான நோக்கத்தைக் குறித்து மறந்து போய்விடுகின்றார்கள். இந்த இடத்திலே நம்முடைய விசுவாசம் பரீட்சைக்குட்படுத்தப்படுகின்றது. இப்படியான சந்தர்ப்பங்களிலே, விசுhசிகள் மனம் பதறி, குறுகிய பார்வையுள்ளவ ர்களாகி, தேவனுக்கு காத்திருக்காமல், தவறான தீர்மானங்களை எடுத் துவிடுவதுமுண்டு. பிரியமானவர்களே, உங்கள் மனதில் எரிந்து கொண் டிருக்கும் தீபமாகிய வேதத்தை அணைத்துப் போடாமல், அனல்மூட்டி எரியவிடுங்கள். தேவனுடைய வாக்குத்தத்தங்களை பற்றிக் கொண்டு, நாம் தாபரிக்கும் பரம தேசமாகிய பரலோகம் எப்போதும் நம்முடைய இலக்காக இருக்கட்டும். விசுவாசத்திலே நிலைத்திருங்கள். வறட்சியான நாட்களிலும், கர்த்தர் நம்மை புல்லுள்ள இடங்களிலே மேய்க்கின்றவரா யிருக்கின்றார்.

ஜெபம்:

சதா காலங்களிலும் உங்களோடு இருப்பேன் என்ற தேவனே, மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போல நான் இருக்கும்படிக்கு கிருபை செய் வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 1:1-6