புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 01, 2022)

தாபரமான கர்த்தருக்கு காத்திருப்போம்

பிரசங்கி 3:11

அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்;


மழலையாக கைளில் ஏந்தி தாலாட்டிய பருவம், சிறு குழந்தையாக வீட்டிலே தவழ்ந்து திரிந்த நாட்கள், சிறு பிள்ளையாக பாடசாலைக்கு சென்ற ஆண்டுகள், வாலிப பருவத்தை அடைந்த காலம், யாவும் கட ந்து நாளை திருமணமாகவிருக்கும் தன் மகனானவனைக் குறித்த, கடந்த கால நினைவலைகள் ஒரு தந்தையின் உள்ளத்திலே ஓடிக் கொண்டி ருந்தது. சிறு மழலையாய் கண்ணயரக் காத்திருந்த நாள்முதல் இன்று வரைக் கும், மகனானவனின் உயர்விலும், தாழ் விலும் அவனோடிருந்து, தன்னிடமிரு ந்த சிறந்தவைகளும், தன்னால் கூடு மான யாவற்றையும் செய்து கொடுத்த தந்தையானவர், தான் எதிர்பார்த்திரு க்கும் நல்ல மனிதனாக அவன் வாழ வேண்டும் என்னும் ஆசீர்வாதத் தையே தன் மகனானவனுக்கு கொடுத்தார். மனிதனானவன், இந்த உல கத்திலே வாழும் நாட்களிலே, அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டா லும், பல காலங்களையும், சமயங்களையும் கடந்து செல்கின்றான். ஒவ் வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு. வானத்தின் கீழிருக்கிற ஒவ்n வாரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு. பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு. நட ஒரு காலமுண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு. கொல்ல ஒரு காலமுண்டு, குணமாக்க ஒரு காலமுண்டு; இடிக்க ஒரு காலமுண்டு, கட்ட ஒரு காலமுண்டு. அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு. புலம்ப ஒரு காலமுண்டு, நடனம்பண்ண ஒரு காலமுண்டு. கற்களை எறிந்துவிட ஒரு காலமுண்டு, கற்களைச் சேர்க்க ஒரு காலமுண்டு. தழுவ ஒரு காலமுண்டு, தழுவாமலிருக்க ஒரு காலமு ண்டு. தேட ஒரு காலமுண்டு, இழக்க ஒரு காலமுண்டு. காப்பாற்ற ஒரு காலமுண்டு, எறிந்துவிட ஒரு காலமுண்டு. கிழிக்க ஒரு காலமுண்டு, தை க்க ஒரு காலமுண்டு. மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு கால முண்டு. சிநேகிக்க ஒரு காலமுண்டு, பகைக்க ஒரு கால முண்டு யுத் தம் பண்ண ஒரு காலமுண்டு, சமாதானம்பண்ண ஒரு கால முண்டு. வரு த்தப்பட்டுப் பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன? என்று பிரசங்கி கூறியிப்பதை வேதத்திலே நாம் வாசிக்கின்றோம். தேவனுக் குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்;கின்ற மனுஷன் எந்த காலத்தை கடந்து சென்றாலும், அவன் தேவனுடைய பலத்த கரத்தி ற்குள் அடங்கியிருப்பதால், எல்லா சூழ்நிலைகளிலும் அவன் மனரம்யமாகவே இருக்கின்றான். உன்னதமான கர்த்தரை தனக்குத் தாபரமாகக் கொண்டிருப்பதால் அவன் ஆபத்தைக் கண்டு அஞ்சான். எனவே, நாம் தேவனையே நம்பி அவருடைய வேளைக்காக காத்திருப்போமாக.

ஜெபம்:

என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கல முமான தேவனே, என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கின்றது, நான் நம்புகிற இரட்சிப்பு, உம்மாலே முன்குறித்த வேளையிலே உண் டாகும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 62:5