புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 31, 2022)

நம் தேவைகளை அறிந்தவர்

சங்கீதம் 24:1

பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது.


இளவேனிற்காலம், வசந்தகாலம், இலையுதிர்காலம், குளிர்காலம் என்று காலங்களானது மாறி மாறி அதன் வட்டத்திலே ஓடிக் கொண்டிருக்கி றது. வாழ்க்கைச் செலவுகளும், விலை வாசிகளும் அதிகரித்துக் கொ ண்டே இருக்கின்றது. எந்தக் காலமானாலும், எந்த நிலையானலும், எப்ப டியாவது என்னுடைய பிள்ளைகளை நான் போஷpக்க வேண்டும் என்று ஒரு குடியாவன் தன் முயற்சிகளை கைவிடாதிருந்தான். அவனுடைய மனதிலே தன் பிள்ளைகள் பட்டினி யாய் போய்விடக்கூடாது என்பதே பிரதான நோக்கமாயிருந்து. இப்படி யாக, இந்த உலகத்திலுள்ள பெற் றோர், தங்கள் பிள்ளைகளின் நல னைக் குறித்து எப்போதும் கருத்துள்ளவர் களாகயிருக்கின்றார்கள். மனி தர்கள் அப்படியாக இருக்கும் போது, நம்முடைய பரம பிதா, தம்மு டைய பிள்ளைகளைக் குறித்து எவ்வளவு கருத்துள்ளவராயிருப்பார் என்று அவருடைய வாக்குத்தத்தங்களை ஆராய்ந்து தியானியுங்கள். ஆன்மீக தேவைகளை மட்டுமல்ல, அவர் இந்த உலகத்திலே நாம் உயிர் வாழ்வதற்கு நமக்கு தேவையானவைகளையும் அறிந்திருக்கி ன்றார். 'சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்த ரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது (சங்கீதம் 34:10). ஆகை யால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள். இவைகளையெ ல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களு க்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார் (மத்தேயு 5:31-32)' இப்படியாக வேதத்திலே, நம்முடைய பரம தந் தையாகிய தேவன் அநேக வாக்குத்தத்தங்களை கொடுத்திருக்கி ன்றார். காலங்கள் மாறிப்போகலாம், சூழ்நிலைகளும் மாறிப்போகலாம், நாமும் மாறிப் போகலாம் ஆனால் நாம் ஆராதிக்கின்ற தேவன் நேற்றும் இன் றும் என்றும் மாறாதவராகவே இருக்கின்றார். ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமி ல்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை. காட்டுப்புஷ;பங் கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக் கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை. அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப் பூட்டி, அழகாக உடுத்துவிக்கின்றார். பூமியும், அதன் நிறையும், அதன் குடிகளும் கர்த்தருடையது. எனவே, சூழ்நிலைகளைக் கண்டு சோர்ந்து போகாதிருங்கள். படைத்தவர் ஒருபோதும் கைவிமாட்டார்.

ஜெபம்:

நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள் என்று சொன்ன தேவனேஇ என்னை எதிர்நோக்கும் சவால்களை கண்டு நான் சோர்ந்து போகாமல்இ படைத்தவர் உம்மையே நோக்கி பார்க்கின்றேன். நீரே என்னை வழிநடத்து வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 5:7