தியானம் (ஆவணி 30, 2022)
வேண்டுதல் செய்பவர்கள் யார்?
எபேசியர் 6:18
எந்தச் சமயத்திலும் சகல விதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியி னாலே ஜெபம்பண்ணி, அத ன்பொருட்டு மிகுந்த மனஉறு தியோடும் சகல பரிசுத்த வான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்து க்கொண்டிருங்கள்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, பிதாவாகிய தேவனுடைய வலதுபா ரிசத்தில் இருக்கிறவரும், நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே (ரோமர் 8:34). மேலும், தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்க ளுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடி ருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயு மிருக்கிறார் (எபிரெயர் 7:25). நாம் விசுவாசத்தின் நல்ல போராட்ட த்தை போராடி, நம்முடைய ஜீவ ஓட்டத்தை முடிக்கும் வரைக்கும் அவர் நமக்காய் வேண்டுதல் செய் கின்றார். நாம் தவறிப் போகின்ற வேளைகளிலும், அவர் தவறாமல் வேண்டும் செய்கின்றார். நாம் யாவ ரும் அவருடைய தூய இரத்தத்தி னால் பாவமறக் கழுவப்பட்டு, பரி சுத்தவான்களாக்கப்பட்டு, கிறிஸ்து வின் சரீரமாகிய சபையின் அவய வங்களாக இருக்கின்றோம். நாம் உலககெங்கும் பரந்து இருக்கின் றோம். வௌ;வேறு சபை ஐக்கிய ங்களிலே தேவனை ஆராதித்து வருகின்றோம். எனினும் நாம் யாவரும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாக இருக்கின்றோம். சரீரத்தின் அவயங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டு இருக்கலாகாது. எனவே ஒருவர் வழித ப்பிப்போகும் போது நம்முடைய ஆண்டவராகிய இயேசு வேண்டுதல் செய்வது போல நாமும் வேண்டுதல் செய்யபவர்களாக இருக்க வேண் டும். ஒருவேளை வழிதப்பி போகின்றவர்கள் விசுவாசியாக இருந் தாலும் அல்லது ஊழியராக இருந்தாலும் அவர்களுக்காக பரிந்துபேசி ஜெபம் பண்ணுங்கள். சில வேளைகளிலே, அவர்களால் நமக்கு நஷ; டமோ, துன்பமோ நேரிட்டிருந்தாலும், கிறிஸ்து நம்மை மன்னித்து, நமக் காக எப்போதும் வேண்டுதல் செய்து கொண்டிருப்பதைப் போல, நாமும் அவர்களை மன்னித்து வேண்டுதல் செய்ய வேண்டும். உங்க ளைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள். உங்களைச் சபிக் கிறவர்களை ஆசீர்வதியுங்கள்;. உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெப ம்பண்ணுங்கள். இப்படிப்பட்ட மனநிலையோடு நாம் வேண்டுதல் செய் யும் போது, நாம் நம்முடைய ஆண்ட வராகிய இயேசு கிறிஸ்துவின் சாயலிலே வளர்ந்து பெருகின்றவர்களாக இருப்போம்.
ஜெபம்:
இரக்கத்தில் ஐசுவரியமுள்ள பிதாவே, நீர் இரக்கமுள்ளவராக இருப்பது போல, உம்முடைய பிள்ளைகளாகிய நாமும் இரக்கமுள்ளவர்களாய் ஒருவருக்காய் ஒருவர் வேண்டுதல் செய்யும் உள்ளத்தை தந்தரு ள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:6-7