புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 29, 2022)

நாம் தேவனுக்குள் வளரும்படிக்கு...

2 தீமோத்தேயு 3:16-17

அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.


பரிசுத்த வேதாகமத்திலே, குற்றம் செய்த தேவ பிள்ளைகளைக் குறித்து எழுதப்பட்டிருக்கின்றதா? ஆதியிலே தேவன் தாம் உண்டாக்கின எல்லா வற்றையும் பார்த்தார், அவை யாவும் மிகவும் நன்றாயிருந்தது. அந்த நாட்களிலே, முதல் பெற்றோராகிய ஆதாம் ஏவாள், தேவனுடைய வார் த்தைக்கு கீழ்படியாமல், பிசாசானவனுடைய வார்த்தைக்கு செவி கொடுத்ததால், குற்றம் செய்தார் கள். இப்படியாக, தேவனுடைய கட்டளையை மீறி நடந்த தேவ பிள்ளைகளின் குறைகள் வேதத் திலே எழுதப்பட்டிருக்கின்றது. இவை எதற்காக எழுதப் பட்டி ருக்கின்றது? குற்றம் செய்த மனித ர்களுக்காகவா? இல்லை, அவர்கள் தாங்கள் செய்த குற்றத்தை அறி ந்திருக்கின்றார்கள். தேவன் குறை பிடிப்பதற்காக எழுதி வைத்தாரா? இல்லை, தேவனாகிய கர்த்தர்தாமே, மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார். தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர் களுக்கு இரங்குகிறார். அப்படியானால், யாருக்காக எழுதி வைக்க ப்பட்டிருக்கின்றது? இவைகள் எனக்காவும், உங்களுக்காகவும் எழுதி வைக்கப்பட்டிருக்கின்றது. ஏன் இவைகளை நான் அறிய வேண்டும்? மற்றவர்களுடைய குற்றங்களை அறிந்து, மனதில் பதித்து வைத்து, எனக்கு எதிராக அவர்கள் வரும் போது அவர்கள் குற்றத்தை வெளிப்ப டுத்துவதற்காகவா? ஆதாம், ஏவாள், காயீன், நோவா, ஆபிரகாம், யாக் கோபு, மோசே, சவுல், தாவீது என்ன குற்றங்கள் செய்தார்கள் என்று அதை அறிந்து, அவர்கள் மதியீனத்தை குறித்து விமர்சிப்பதற்காகவா? இல்லை, நாம் அவர்களுடைய வாழ்க்கையின் சாட்சியை ஆராய்ந்து பார்த்து, அவைகள் வழியாக கற்றுக் கொள்ளும்படிக்கும், நாம் பாவம் செய்யாதபடிக்கும், இவைகள் யாவும் எனக்காகவும் உங்களுக்காகவும் எழுதி வைக்கப்பட்டிருகின்றது. வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவி யினால் அருளப்பட்டிருக்கிறது. நாம் தேவனுக்குள் தேறினவர்களும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவர்களுமாயிருக்கும்படிக்கு அவை நம்மை புடமிட்டு தேவ சாயலாக மாற்றுகின்றது. எனவே எப் போதும் நாம் நம்மை தேவ வார்த்தையின் வெளிச்சத்தில் ஆராய்ந்து, நம் தவறுகளை விட்டு, தேவ சாயலிலே வளர்ந்து பெருக வேண்டும்.

ஜெபம்:

வேதத்தின் மகத்துவங்களை எனக்கு எழுதிக் கொடுத்த தேவனே, அவைகளினாலே நான் மற்றவர்களை நியாயந்தீர்க்காமல், உம் வார்த் தையினால் நான் தேவ சாயலிலே வளர்ந்து பெருக கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 19:7-8