தியானம் (ஆவணி 28, 2022)
நாளாந்த வாழ்வின் சூழ்நிலைகள்
1 தீமோத்தேயு 2:1
எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களை யும் பண்ணவேண்டும்;
பாடசாலைகளிலே, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடங்களை சொல் லிக் கொடுக்கின்றாரகள். வைத்திய சாலையிலே, வைத்தியர்கள் அங்கு வரும் நோயாளிகளுக்கு வைத்தியம் செய்கின்றார்கள். வேலையிலே அதிகாரிகள் வேலை தேடி வருகின்றவர்களுக்கு வேலை கொடுக்கின் றார்கள். இப்டியாக தலைவர்கள் குடிமக்களை ஆளுகின்றார்கள் இவை யாவும் நன்மைக்காக ஏற்படுத்தப்ப ட்டிருக்கின்ற போதிலும், இவை யெல்லாம் இந்த உலகத்திலேயே செயற்பட்டு வருகின்றது. ஆசிரியர்க ளாகவோ, வைத்தியர்களாகவோ, தொழில் அதிகாரிகளாகவோ, தேசத் தை ஆளுகின்றவர்களாகவோ அல் லது வேறெந்த வேலைகளாக இருந் தாலும், அவர்கள் யாவரும் மனி தர்களாகவே இருக்கின்றார்கள். அதனால், அங்கே குறைவுகளும் நிறை வுகளும் காணப்படும். மனிதர்களுடைய நாளாந்த வாழ்க்கையிலே கஷ;டங்களும், பெலவீனங்களும், சவால்களும் நிறைந்திருக்கின்றது. அவற்றுள் சிலவற்றை மனிதர்கள் ஜெயம் கொள்கின்றார்கள், வேறு சிலவற்றில் தவறுகள் ஏற்படுவதுண்டு. எந்த நற்செயலையும் செய்ய நியமிக்கப்பட்ட மனிதர்களும் இவைகளுக்கு விதிவிலக்கானவர்கள் அல் லர். இந்த உலகத்தின் போக்கிலே வாழும் மனிதர்கள் குறைவுகளை யும், தவறுகளையும் காணும்போது வெவேறான நடவடிக்கைகளை எடுத் துக் கொள்கின்றார்கள். முறுமுறுத்தல், முறையிடுதல், தூற்றித்திரிதல், சாபமிடுதல், சபித்தல் போன்ற செயற்பாடுகளை மனிதர்கள் வெளிக் காண்பிக்கின்றார்கள். ஆனால், தேவனுடைய பிள்ளைகளாகிய நாம், குறை வுகளை காணும்போது எப்படியாக அவைகளுக்கு முகங்கொடுக்கி ன்றோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு சந்தர்ப்பங்க ளிலும், என்ன செய்ய வேண்டும், என்ன சொல்ல வேண்டும் என்று தேவ னுடைய ஆவியானவரின் உதவியை கேட்க வேண்டும். தேவனோடு உற வாடி தியானிக்கும் வேளையிலே, நாம் தேவனுடைய பிள்ளைகள் என் பதையும், அவர்களுக்குரிய திவ்விய சுபாவங்கள் என்ன என்பதாயும் ஆராய்ந்து பார்த்து, பேசுகிறதிற்கு பொறுமையாயும், கோபிப்பதற்கு தாம தமாயும் இருக்க வேண்டும். தேவனனுடைய வார்த்தையை தியானிப்ப தாலும், ஜெபிப்பதாலும் நாம் நம்முடைய மாம்ச எண்ணங்களை ஜெயம் கொள்கின்றவர்களாயும், ஆசிரியர்கள், வைத்தியர்கள், அதிகாரிகள் போன்ற யாவருக்கும் வேண்டிய ஞானத்தையும் பெலத்தையும் வழிடத் துதலையும் கொடுக்கும்படிக்கும் நாம் அவர்களுக்காகவும் வேண்டுதல் செய்கின்றவர்களாயும் வாழ முடியும்.
ஜெபம்:
குறைவுகளை நிறைவாக்கும் தேவனேஇ நாளாந்த வாழ்க் கையிலே ஏற்படும் சூழ்நிலைகளினாலே நான் என் மாம்ச இச்சைகளை வெளிப்படுத்தாமலும்,உம்முடைய பிள்ளையாக வாழ என்னை வழிநட த்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - யாக்கோபு 1:19