புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 27, 2022)

நாளை என் நிலை என்ன?

புலம்பல் 3:22

நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை


ஒரு வாலிபனானவன் தன் தகப்பனை நோக்கி: அப்பா, அந்த நாட்டிலே இருக்கும் உழியரொருவரின் மோசடியைக் குறித்த வர்ணனையை இணை யத்தளத்திலே பதிவேற்றியிருக்கின்றார்கள். அதை நீங்கள் பார்த்தீர் களா? என்று கேட்டான். இல்லை, மகனே, அந்த காணொளி எத்தனை நிமிடங்கள் என்று கேட்டார். முதல் பாகம் 70 நிமிடங்கள். அடுத்த பாகம் நாளை வெளிவரும் என்று மகனான வன் பதில் கூறினான். அப்படியா, மகனே, இன்று நீ வேதத்தை வாசித் தாயா என்றார். ஆம் அப்பா காலை யிலே சில நிமிடங்கள் வாசித்து, பின்பு 15 நிமிடங்கள் ஜெபம் செய் தேன் என்றார். அப்போது அவர் தன் மகனை நோக்கி: மகனே, நீ இப் போது சின்னப் பிள்ளையல்ல. வயது க்கு வந்தவன். ஆண்டவர் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு ஞானஸ்நானத்தை எடுத்திருக்கின்றாய். எனவே, நான் சொல் வதை பொறுமையடன் கேட்டு, அவைகளை தியானம் செய்து, பின்பு தீர்மானத்தை எடுத்தக் கொள் என்றார். நீ உன் இருதயத்தை எதினாலே நிரப்புகின்றாய் என்பதைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாயிரு. பரிசுத்த வேதா கமத்திலும், குற்றங்கள் செய்த மனிதர்களைப் பற்றி கூறப்பட்டிரு க்கி ன்றது. அதே வேளையிலே அவர்களின் முடிவுகளைப்பற்றியும் கூற ப்பட்டிருக்கின்றது. உலகத்தில் நடக்கும் செய்திகளை அறிந்து கொள் வதில் தவறில்லை ஆனால் அவைகளைப் பிரசுரிப்பவர்களின் நோக்கம் என்ன என்பதை அறிந்து கொள். அதே வேளையிலே, நீ மற்றவ ர்களுடைய குறைகளை அறிந்த பின்பு, அதைப் பற்றி நீ என்ன செய் யப் போகின்றாய் என்பதைக் குறித்தும் எச்சரிக்கையாயிரு. மற்றவர்க ளுடைய குறைகளை பார்க்கும் சிலர், அதை இன்னும் அநேகருக்கு அனுப்பி வைக்கின்றார்கள். பின்பு, அதைப் பற்றி பேசி, விமர்சித்து, அவர்கள் நடந்த வழிகள் யாவற்றையும் தங்கள் கண்களால் நேரடியாக கண்டு, கேட்டவர்களைப் போல அந்த நபரை நியாயந்தீர்க்கின்றார்கள். நாளைக்கு குற்றம் செய்தவர் மனந்திரும்பலாம். அவரை ஆண்டவர் இயேசு மன்னிக்கலாம். ஒருவேளை, நீயும் அப்படிப்பட்ட குற்றத்திலே நாளை சிக்கிக் கொள்ளலாம் அல்லது நம்முடைய சந்ததியினர் தவறிப் போகலாம். நீ உறுதியாய் நிற்கிறவனென்று எண்ணினால், நீ விழாதப டிக்கு, எச்சரிக்கையுள்ளவனாக இருந்து, தேவ கிருபைக்காக நன்றியை செலுத்தி, விழுந்து போயிருக்கின்றவர்கள் மறுபடியும் எழுந்திருக்கும் படி அவர்களுக்காக ஜெபம் செய்து கொள் என்றார்.

ஜெபம்:

நான் வழுவாதபடிக்கு என்னை காத்து வழிநடத்தும் தெய்வமே, பெலவீனப்பட்டிருப்பவர்களின் மனக் கண்கள் திறக்கப்படட்டும். உம்முடைய கிருபை அவர்கள்மேல் பூரணமாக விளங்குவதாக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 கொரி 10:12