புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 26, 2022)

மற்றவர்களை அளக்கும் அளவு

மாற்கு 12:31

உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக


இன்ரநெற் வழியாக செய்தி ஊடகங்கள் மலிந்திருக்கும் இக் காலக ட் டத்திலே, ஒரு மனிதனானவன், தான் ஒரு விமர்சகன் (Critic) என்று கூறி, சமுகத்திலே நடக்கும் தறவுகளையும், குறைகளையும் குறித்தே சுட்டிக் காட்டிக் கொண்டு வந்தான். நாளுக்கு நாள் அவனுடைய இணையத்தள ஒளிபரப்பை பின்பற்றும் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே போனார் கள். நாட்கள் கடந்து சென்ற பின்பு, அவன் எங்கு சென்றாலும், எங்கே தவறு நடக்கின்றது, எங்கே குறை கள் இருக்கின்றது என்பதை அறி வதே அவனுடைய எண்ணமாயிரு ந்து. அவன் வாழும் சமுகத்திலே, தவறுகள் ஏதும் நடக்காதவிடத்து அவன் மனதில் பதற்றம் ஏற்பட்டுவிடும். நாளைய தினத்திலே ரசிகர்களு க்கு எதை கூறுவேன் என்ற கேள்வி அவன் மனதிலே அழுத்திக் கொண் டிருக்கும். ஏன் ஆயிரக்கணக்கான ரசிகர்கள், தப்பாமல் அவன் செய் தியை பின்பற்றி வந்தார்கள்? நீங்களே சிந்தனை செய்து பாருங்கள். இப்படியாக நாட்கள் ஓடிக்கொண்டிருக்கும் போது, ஒரு நாள் இந்த விமர்சகனின், மகனானவன், தன் நண்பர்களோடு சேர்ந்து களவொன்றிலே அகப்பட்டுவிட்டான். இந்தச் செய்தியானது, உள்ளூர் பத்திரிகை யொன்றிலே பிரசுரமானது. அதை அறிந்து கொண்ட விமர்சகன்: என்னு டைய மகன் கள்வன் அல்ல. அவன் குடிகாரனும் அல்ல. பாடசாலை முடியும் நாட்களிலே, நண்பர்களோடு சேர்ந்து மதுபானத்தை அருந்திவி ட்டான். அதனால், விளையாட்டிற்காகவே தற்செ யலாக பாடசாலை யிலே சில பொருட்களை எடுத்துவிட்டான் என்று கூறினான். அதற்கு அந்த விமர்சகனின் உறவினர்களில் ஒருவன் அவனை நோக்கி: ஊர் உலகம் குற்றம் செய்தால், அவை சிறிதோ, பெரிதோ உன் கண்களிலே அது குற்றமே. இந்த ஊரிலே யாரைவிட்டு வைத்தாய்? சிறிதான தவறு களினால், எத்தனை பெயருடைய நற்பெயருக்கு பங்கத்தை கொண்டு வந்தாய். இப்போது, உனக்கு அன்பானவர்கள் குற்றம் செய் யும் போது, அது உண் கண்களுக்கு குற்றமாக தெரியவில்லையா என்று கண்டித்து கூறினார். பிரியமானவர்களே, 'ஆதலால், மனுஷர் உங்களு க்கு எவை களைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவ ர்களு க்குச் செய்யுங்கள. நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.' என்பது கர்த்தராகிய இயேசு கூறிய சத் திய வார்த்தைகள். எனவே, மற்றவர்களை குறித்து விமர்சிக்க முன்பு, இவைகளைத் தெளிவாக உங்கள் மனதிலே பதிய வைத்திருங்கள். கர்த்த ருடைய வார்த்தைகள் ஒருபோதும் மாறாதது.

ஜெபம்:

பரிசுத்த வாழ்விற்கு வேறு பிரித்த தேவனே, என்னை குற்றவாளிகயென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று நான் தீர்க்காதபடிக்கும் நீர் எனக்கு பிரகாசமுள்ள மனக் கண்களைத் தந்த ருள்வீராக. இட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 2:1-6

Category Tags: