புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 25, 2022)

பரிந்து பேசி ஜெபியுங்கள்

எபேசியர் 2:5

அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.


அயலிலே வாழும் சில மனிதர்களின் அங்கிகாரமுள்ள வாழ்க்கை முறை மையையும், எப்படியாக அவர்கள் மற்றவர்களை சிறுமைப்படுத்தி வாழ் கின்றார்கள் என்றும் கண்ட விசுவாசியொருவன், மனதிலே பெரும் குழ ப்படைந்தான். இவர்கள் இப்படி எத்தனை காலம் வாழப்போகின் றார்கள்? எப்போது இவர்களுடைய மேட்டிமையான வழிகளுக்கு தகுந்த தண்டனை கிடைக்கும் என தன் வயதான பாட்டனானவரோடு பேசிக் கொண்டிருந்தான். அதற்கு பாட்ட னானவர்: தம்பி, நான் அறிய என் னுடைய பாட்டனார் காலத்திலிருந்து, நாங்கள் உத்தம மனிதர்கள் என்று எண்ணி, சமுக அந்தஸ்தின் பெய ரின் கீழே எத்தனையோ ஏழை எளி யவர்களை ஆகாதவர்கள் என்று சிறுமைப்படுத்தி வந்தோம். மெய் யான தேவன் வெறுக்கும் அகங்காரம் எங்களுடைய பரம்பரைச் சின்னமாக இருந்து வந்தது. அப்படியிருந்தும், இருபது ஆண்டுக ளுக்கு முன்பு, அருகதையற்ற எங்களையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சந்தித்தார். ஆண்டாண்டு காலமாக கிறிஸ்துவைச் சேராதவர்களும், நம்பிக்கையில்லாதவர்களும், மெய்யான தேவன் யார் என்றும் அறி யாது வாழ்ந்து வந்தோம். கிருபை நிறைந்த தேவனானவர்தாமே, இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளி யைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகா சித்தார். அப்படியில்லாதிருந்தால், நாமும் அவர்களைப் போல பெரு மையிலே வாழ்ந்து வந்திருப்போம். எங்களுடைய மனமாற்றத்திற்காக எத்தனைபேர், எத்தனை காலமாக பரிந்து பேசி தேவனை வேண்டிக் கொண்டார்களோ தெரியாது. எனவே நாமும், இருளடைந்திருக்கும் அவர் களுடைய மனக்கண்கள் வெளிச்சமடைய வேண்டும் என்று தேவனி டத்திலே வேண்டிக் கொள்வோம் என்று பேரனானவனுக்கு தேவனு டைய கிருபையை பற்றி கூறினார். பிரியமானவர்களே, இன்று சில மனிதர்கள், ஆண்டுகள் கடந்து போனபின்பு, தேவன் தங்களுக்கு செய்த பெரிதான நன்மையை மறந்து, தாங்கள் எப்போதும் உத்தமர்களாகவே இருக்கின்றோம் என்ற எண்ணமுடையவர்களாக வாழ்ந்து வருகின்றார் கள். இப்படிப்பட்ட கடினமுள்ள இருதயம் நமக்கு வேண்டாம். இரு ளிலே வாழ்கின்றோம் என்று அறியாமல், தாங்கள் மேன்மக்கள் என்று எண்ணிக் கொண்டு, இருளிலே வாழும் ஜனங்களுக்காக தேவனிடத் திலே வேண்டுதல் செய்வோமாக.

ஜெபம்:

நான் நிர்மூலமாகாதிருக்கிறது உம்முடைய சுத்த கிருபையே, நீர் மற்றவர்கள்மேல் காண்பிக்கும் இரக்கங்களைக் குறித்து நான் எரிச்சலடையாதிருக்க என்னை உணர்வுள்ளவனாக்குவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 6:17