புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 24, 2022)

நம்மைக் காக்கும் தேவ தயவு

சங்கீதம் 145:9

கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலுமுள்ளது


பண்டைய காலத்திலிருந்த மகா நகரமாகிய நினிவேயில் வாழ்ந்த மக்க ளின் அக்கிரமங்கள் தேவனுடைய சமுகத்திலே எட்டினதால் அதை நியா யந்தீர்க்க தீர்மானம் செய்து, யோனா என்னும் தீர்க்கதரிசியை தேவன் அங்கே அனுப்பினார். தேவ எச்சரிப்பை கூறிய தேவனுடைய ஊழி யன்: 'இன்னும் நாற்பதுநாள் உண்டு. அப்பொழுது நினிவே கவிழ்க் கப்பட்டுப்போம்' என்று கூறினான். அந்த மகா நகரத்தின் அக்கிரமங் கள் அதிமாக இருக்கும் போது, ஏன் தேவனாகிய கர்த்தர் அதை உடனடியாக அழித்துப் போடாமல், 40 நாள் தவணை கொடுத்தார்? ஏனெனில் மக்கள் தங்கள் அக்கிரம த்தில் அழிந்து போவதையல்ல, மாறாக அவர்கள் தங்கள் துன்மார்க்கமான வழிகளிலிருந்து மனந்திரு ம்பி மன்னிப்பை பெற்று, சமாதானமாய் வாழ வேண்டும் என்பதே அவருடைய திட்டமாக இருக்கின்றது. நினிவேயின் ராஜாவும், மக்களும் தேவனை விசுவாசித்து, உபவாசஞ் செய்யும்படிக் கூறினார்கள்; பெரி யோர்முதல் சிறியோர்மட்டும் இரட்டுத்திக் கொண்டார்கள். அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவ ர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய் வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக்குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய் யாதிருந்தார். மனதுருக்கமுள்ள தேவன் இவரே, நாம் ஆராதிக்கும் நல்ல தேவன். அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை (புலம்பல் 3:33). முன்பு, நினிவேயின் மக் கள், தங்கள் பொல்லாத வழிகளை தெரிந்து கொண்டு, அவைக ளிலே வாழ்ந்து வந்தார்கள். அவர்களுடைய பொல்லாத வழிகளுக் குதக்க தான தண்டனையானது கொடுக்கப்படாதிருப்பதை கண்ட தேவனு டைய ஊழியராகிய யோனா கூட விசனமடைந்தார். ஆனால், தங்கள் அக்கிரமங்களிலே சங்காரமாகிக் கொண்டிருக்கும் ஆத்துமாக்களை குறித்து அன்புள்ள தேவனாகிய கர்த்தர் பரிதபிக்கின்றாராயிருக்கின்றார். நியாயத்தீர்பின் நாள் ஒன்று உண்டு. ஆனால், கிருபையின் காலத்திலே வாழும் நாங்கள், எங்களைச் சூழ உள்ளவர்களை தேவன் ஏன் அவர் களுடைய செய்கைகளுக்கு தக்கதாக சரிக்கட்டாமல் இருக்கி ன்றார் என்று ஆச்சரியப்படுவதெப்படி? ஏனெனில், அவர் என்னையும், உங்க ளையும் நம்முடைய செய்கைகளுக்குத் தக்கதாக சரிக்கட்டாமல், தின மும் தம்மு டைய தயவை நம்மேல் பொழிகின்றாரே.

ஜெபம்:

மனுதுருக்கமுடைய தேவனே, கிறிஸ்துவுக்குள் நீர் எங்களுக்கு மன்னித்து வருவதைப் போல, நாங்களும் ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயுமிருந்து மன்னிக்கும்படி உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபேசியர் 4:32