புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 23, 2022)

எல்லோரும் மனந்திரும்ப வேண்டும்

2 பேதுரு 3:9

ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.


கர்த்தருடைய வார்த்தை ஏரேமியா என்னும் சிறு பிள்ளைக்கு உண் டாகி, அவர்: நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார். நான் உன்னை அனுப் புகிற எல் லாரிடத்திலும் நீ போய், நான் உன க்குக் கட்டளையிடுகிறவைகளையெ ல்லாம் நீ பேசுவாயாக. நீ அவர்க ளுக்குப் பயப்படவேண்டாம்; உன் னைக் காக்கும்படிக்கு நான் உன்னு டனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லி, கர்த்தர் தமது கரத்தை நீட்டி, என் வாயைத் தொட்டு: இதோ, என் வார்த்தைகளை உன் வாயிலே வைக்கிறேன். பார், பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட் டவும், நாட்டவும் உன்னை நான் இன்றையதினம் ஜாதிகளின்மேலும் ராஜ்யங்களின்மேலும் ஏற்படுத்தினேன் என்று கர்த்தர் என்னுடனே சொன்னார் என்றான். ஆம், பிரியமானவர்களே, ஏரேமியா என்பவர், தேவனு டைய ஜனங்களுக்கு விரோதமாக தீர்க்கதரிசனம் சொல்லும்படிக்கு, பிர த்தியேகமான ஊழியத்திற்கு தேவனாலே தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு பாத்திரம். இவர் வல்லமையான தீர்க்கதரிசியாக இருந்த போதிலும், வாழ்நாள் முழுவதும் உபத்திரவத்தை சந்திக்க நேரிட்டது. (புலம்பல் 3:1-22)தேசத்தின் அதிகாரிகளும், மதத்தலைவர்களும் இவருக்கு எதிராக இருந்தார்கள். இவரை புலம்பலின் தீர்க்கதரிசி என்றும் கூறுவதுண்டு. தேவனானவர், நம் ஒவ்வொருவரையும் தாயின் கர்ப்பதிலிருந்து தெரி ந்து கொண்டது உண்மை. ஆனால், ஏரேமியாவைப் போல தேவ ஜனங் களுக்கு விரோதமாக தீர்க்கதரிசனம் சொல்லும்படிக்கும், எப்போதும் மற்றவர்களின் குறைகளை வெளிப்படுத்தும்படிக்கும், மற்றவர்களுக்கு புத்திமதி கூறி கடிந்து கொள்ளவும் தெரிந்து கொண்டாரா என்பதைக் குறித்து நாம் ஒவ்வொருவரும் எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும். அதே வேளையிலே, ஏரேமியா தன்னுடைய ஜனங்களுக்காக தேவனிடத்திலே பல முறை பரிந்து பேசி, ஜனங்கள் அழிவை காணக் கூடாது என்று கண்ணீரோடு இரந்து கெஞ்சினார் என்பதை மறந்து போகாதிருங்கள். (ஏரேமியா 7:16 11:14, 14:11). கருப்பொருளாவது, நாம் எந்த அழைப்பை பெற்றிருந்தாலும், ஒருவரும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்ற நோக்கம் நம்முடைய இருதயத்திலே எப்போதும் இருக்க வேண்டும்.

ஜெபம்:

நீடிய பொறுமையுள்ள தேவனே, துன்மார்க்கன் தன் துன்மார்க த்தில் சாகிறதை விரும்பாத நீர், உம்முடைய பிள்ளைகளாகிய எம்மை எவ்வளவு அதிகமாக நேசிக்கின்றீர் என்பதை உணர்ந்து கொள்ளும் இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எசேக்கியேல் 18:23

Category Tags: