புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 22, 2022)

எனக்கு தந்த பொறுப்பு என்ன?

1 தெச 5:5

நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்;


ஒரு பண்ணையின் உரிமையாளரொருவர், வெளியூருக்கு செல்ல வேண் டியதாக இருந்ததால், தன் குமாரர்களை அழைத்து அவர்கள் ஒவ்வொ ருவரும் செய்ய வேண்டிய பொறுப்புக்களை பிரித்து கொடுத்து, அவர வர் தங்கள் வேலைகளை கருத்துடன் செய்யுமாறு கூறி, பிரயாணப் பட்டார். குமாரர்களிலொருவன், தனக்கு கொடுத்த பொறுப்பை அலட் சியம் செய்து கொண்டு, தன் நண்பர்க ளுடன் சேர்ந்து, மதுபான வெறி கொண்டு, நாட்களை கழித்துக் கொண் டான். இதை பார்த்துக் கொண்டடிருந்த இரண்டாவது குமாரன், நாங்கள் மட் டும் ஏன் கஷ;டப்பட்டு வேலை செய்ய வேண்டும். இவனுடைய அசட்டைத்த னத்தைப் பாருங்கள். கேட்பதற்கு யாரு மில்லை என்றுதானே இவன் இப்படி யாக நடந்து கொள்கின்றான் என்று கோபப்பட்டு, அவனிடம் சென்று, நீ ஏன் இப்படி உன் காலத்தையும், அப்பாவின் ஆஸ்திகளையும் அழித்துப் போடுகின்றாய்? உனக்கு அறிவில்லையா என்று கடிந்து கொண்டான். மதுபான வெறியிலே இருந்த மற்றய குமாரன் தன்னை கடிந்து கொண்டவனை நோக்கி: உன்னை யார் எங்களுக்கு தலைவ னாக ஏற்படுத்தியது? நீயும் உன் வேலையை விட்டுவிட்டு இங்கே வந்து ஏன் எனக்கு கஷ;டங் கொடுக்கின்றாய்? போய் உன் வேலையை பார்த்துக் கொள் என்று சத்தமிட்டான். இப்படியாக வாக்குவாதம் கட்டுமீறி கைக லப்பில் முடிவடைந்தது. இதன் விளைவாக பண்ணையிலே பல வேலை கள் தாமதமாகி, பெரும்நஷ;டம் ஏற்பட்டது. தகப்பனானவன் திரும்பி வரு ம்போது, இவர்கள் இருவரும் கடமையை தவறியவர்களாகவும், கலக க்கார்களாகவும் காண்பார் அல்லவா? ஆம், பிரியமானவர்களே, சில வேளைகளிலே நாமும், மற்றவர்களுடைய குறைகளிலே நம்முடைய கண்களைப் பதிய வைக்கும் போது. நாம் நமக்கு கொடுத்த பொறுப்பு களிலிருந்து விலகி, நாமும் கலகக்காரர்களாக மாறிவிடுவோம். பிரியமா னவர்களே, நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்கள ல்லவே. ஆகையால், மற்றவர்கள், தங்களுக்கு கொடுத்த பொறுப்புகளை அச ட்டை செய்து தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக் கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம். இரவிலே திருடன் வருகிறவித மாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திரு க்கிறீர்கள். எனவே உண்மையும் உத்தமமுமான பிள்ளைகளாக நடந்து, தேவனுடைய சித்தத்தை உங்கள் வாழ்வில் நிறைவேற்றுங்கள்.

ஜெபம்:

பரலோக எஜமானனாகிய கர்த்தாவே, உண்மையும் உத்தமமுமான ஊழியக்காரனே என்று நீர் என்னை அழைக்கும்படிக்கு நீர் தந்த வைகளில் நான் கண்ணும் கருத்துமாக இருக்க கிருபை செய்வராக. இர ட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 25:14-30