புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 21, 2022)

நீ தேவனுடைய வீட்டை சேர்ந்தவன்

சங்கீதம் 37:8

கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு; பொல்லாப்புச்செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்.


நாம் வசிக்கும் வீட்டிலே குறைவுகள் இருக்கலாம். குடும்பத்திலே பிரச் சனைகள் ஏற்படலாம். அந்த வேளைகளிலே நாம் அந்த குறைவுக ளையும், பிரச்சனைகளையும் தீர்த்து கொள்வதற்கு வழிகளை நாம் செய்யக்கூடுமானால் நாம் அவைகளை செய்யலாம் அல்லது அவை களை பெரிதாக்கி, கலகங்களாக மாற்றிவிடலாம் அல்லது அவைகளை தீர்த்துக் கொள்வதற்கு நம்மிடத்தில் திராணியில்லையென்றால் அவைகளை தேவனுடைய பாதத்திலே இறக்கி வைத் துவிடலாம். இவ்வண்ணமாகவே, நாம் வேலை செய்யும் இடங்களிலே, உற வுகள் மத்தியில், விசுவாசிகள் கூடிவ ரும் சபை ஐக்கியத்தில் குறைவுகள் ஏற்படலாம். அவையொன்றிலும், நாம் எப்படி செயற்படபோகின்றோம் என்று தீர்மானம் செய்வதற்கு நமக்கு சுயா தீனம் உண்டு. ஆனால், நம்முடைய சுயாதீனம் தேவ சித்தத்தை நிறை வேற்றுகின்றதா? அல்லது தேவ நீதி நிறைவேற இடம் கொடுக்கின்றதா என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். நாம் கலக வீட் டார் அல்லர். மாறாக நாம் தேவனுடைய வீட்டார். இன்றைய உலக த்திலே மட்டுமல்ல, முன்னோர் வாழ்ந்த உலகங்களிலும், குறைவுகளும், அநியாயங்களும், அக்கிரமங்களும் இருந்தது. அதை படைத்த தேவன் அறியாதிருந்தாரோ? சர்வ வல்லமையுள்ள தேவன் எல்லாவற்றையும் அறிந்திருக்கின்றார். அவர் தமது ஒரு சொல்லாலே இந்த உலகத்தை முற்றாக அழித்துப் போட முடியும் ஆனால் அவர் நீடிய பொறுமையு ள்ளவராக இருக்கின்றார். ஆனால், மனிதர்களோ, பொறுமையை இழ ந்து, காரியங்களைத் தங்கள் கரங்களில் எடுத்துக் கொண்டு, பழிகளை தங்கள் தலைமேல் ஏற்றிக் கொள்கின்றார்கள். தேவனுடைய வழிநடத்து தல் இல்லாமல், தங்களுக்கு செம்மையாக தோன்றும் வழிகளின்படி பிரச்சனைகள் தீர்க்க எத்தனித்து, சிறிய பிரச்சனைகளை, சமுக கலவ ரங்களாக மாற்றிவிடுகின்றார்கள். பிரியமானவர்களே, உங்களுடைய தனி ப்பட்ட வாழ்விலும், குடும்பத்திலும், சமுகத்திலும், சபையிலும், தேச த்திலும், உலகத்திலும் நடைப்பவைகள் யாவற்றையும் தேவன் அறிந் திருக்கின்றார். எனவே எரிச்சலடையாமல், நியாத்தீர்ப்பு செய்யாமல், தேவனுடைய நீதி நிறைவேறும்படி இடங்கொடுங்கள். அதினாலே, அக் கிரத்தினால் அழிவை நோக்கி போகின்ற ஆத்துமாக்களை பாதாள கெடியிலிருந்து மீட்டுக் கொள்ள வழிகள் உண்டாகும்.

ஜெபம்:

நீதியின் தேவனேஇ என்னுடைய வழிகள் உமக்கு; பிரியமாயிரு க்கும்படிக்கு என்னுடைய நடைகள் உம்மால் உறுதிப்படுவதாக. நான் தீமைக்கு தீமை செய்யாதபடி ஆத்துமாவை பொல்லாப்புக்கு விலக்கிக் காத்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 12:2