புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 20, 2022)

தேவ சித்தம் நிறைவேற இடங் கொடுங்கள்

1 சாமுவேல் 12:20

கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழுஇருதயத்தோடும் சேவியுங்கள்.


தேவனாலே இஸ்ரவேலின் நியாயதிபதியாகவும், தீர்க்கதரியாகவும் நிய மிக்கப்பட்ட சாமுவேல் முதிர்வயதானபோது, தன் குமாரரை இஸ்ரவே லின்மேல் நியாயாதிபதிகளாக வைத்தான். ஆனாலும் அவனுடைய குமாரர் சாமுவேலின் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புர ட்டினார்கள். அப்பொழுது இஸ்ர வேலின் மூப்பர் எல்லாரும் கூட்ட ங்கூடி, ராமாவிலிருந்த சாமுவேலி னிடத்தில் வந்து: இதோ, நீர் முதிர்வ யதுள்ளவரானீர்; உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதி ல்லை. ஆகையால் சகல ஜாதிகளு க்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என் றார்கள். எங்களை நியாயம் விசாரிக்க ஒரு ராஜாவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சொன்ன வார்த்தை சாமுவேலுக்குத் தகாததாய்க் காண ப்பட்டது. ஆகையால் சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான். அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி: ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள்; அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள் என்றார். பிரியமானவர்களே, சாமுவே லின் குமாரர்கள், தங்கள் தந்தையாகிய சாமுவேலைபோல உத்தமர்க ளாக இருக்கவில்லை என்பது உண்மை. அதை சாமுவேல் நிராகரிக்க வில்லை. அப்படியான வேளைகளிலே, காரியங்களை தங்கள் கரங்க ளில் எடுத்து, தங்களுக்குள் தாங்களே முடிவெடுப்பது தேவனுடைய சித்தம் அல்ல. சாமுவேலுக்கு முன்பாக இருந்த ஏலியின் குமாரர்கள் ஆலயத்திலே அநியாயம் செய்து வந்தார்கள். அவர்களின் முடிவை கர்த்தர் நிர்ணயித்தார். அது கர்த்தருடைய வீடு. கர்த்தர் பார்த்துக் கொள் வார். ஆனால் இஸ்ரவேலின் மூப்பர்கள் ஜனங்களோடு சேர்ந்து, தேவ னுக்கு விரோதமாக தங்கள் கரங்களை நீட்டி, தேவனாகிய கர்த்தரே அவர்களுக்கு ராஜாவாயிருந்தும், அவர்கள் சாமுவேலை நோக்கி: அப் படியல்ல, ஒரு மனுஷன் எங்கள்மேல் ஆளவேண்டும் என்றார்கள். பிரி யமானவர்களே, தேவன் சகலத்தையும் அறிந்தவராயிருக்கின்றார். எனவே, அவருடைய பாதத்திலிருந்து விண்ணப்பம் செய்யுங்கள். தேவன் நிய மித்த ஒழுங்கை உங்கள் மாம்ச எண்ணப்படி மாற்ற முயற்சி செய்யாமல் அவரு டைய சித்தம் நிறைவேற இடங்கொடுங்கள்.

ஜெபம்:

சகலத்தையும் ஆளுகை செய்யும் தேவாதி தேவனேஇ உம்மு டைய ஆவிக்கு மறைவான காரியும் ஒன்றுமில்லை. நான் உமக்கு விரோ தமாக என் கைகளை உயர்த்தாதபடிக்கு அடியேனை காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:10