புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 19, 2022)

தேவன் நியமித்த ஒழுங்கு

யோவான் 13:20

நான் அனுப்புகிறவனை ஏற் றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்,


ஒரு பாடசாலையிலே படித்து வந்த மாணவனானவன், சில தகாத பழக்க வழக்கங்களுள்ள சகமாணவர்களோடு சேர்;ந்து, பாடசாலையின் ஒழுங்கு முறைகளுக்கு விரோதமான குற்றத்தை செய்ததால், பாடசாலை திண க்களத்தின் சட்டப்படி அவன் அந்தப் பாடசாலையிலிருந்து தற்காலி கமாக இடைநிறுத்தப்பட்டான். இந்த சம்பவமானது, வேறு ஒரு மாண வன் வழியாக ஒரு விசுவாசியின் காது களிலே எட்டினதால், அந்த விசுவாசி இடைநிறுத்தப்பட்ட மாணவனின் பெற்றோரோடு நல்ல நட்புள்ளவனாக இருந்ததால் அவ ர்களைச் சந்தித்துப் பேசினான். பெற்றோர் முதலாவதாக சொன்ன விடயம் என்னவென்றால், இந்த சம்பவமானது எந்த விதத்திலும் எங்க ளுடைய சபைப் போதகருக்கோ மூப்பர்களுக்கோ தெரியக்கூடாது என் றார்கள். அவர்களுடன் பேச சென்ற விசுவாசியானவன், சகோரதனே இது உங்களுடைய விவகாரம், நீங்கள் அதை சரியான முறையிலே கை யாள வேண்டும் எனவே நான் யாருக்கும் இதை சொல்லப் போவதி ல்லை. இந்த சம்பவமானது பாடசாலையிலே அநேக மாணவர்களுக்கு தெரி யும். எனவே மலிந்தால் எதுவும் சந்தைக்கு வரும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நான் இந்த காரியத்தைக் குறித்து அல்ல, உங்கள் ஆவிக்குரிய வாழக்கையின் மனநிலையை குறித்தே அதிக கரிசணையுடையவனாக இருக்கின்றேன். தேவனுக்கு மறைவான காரி யம் ஒன்று மில்லை. சபைப் போதகர், தேவனால் ஏற்படுத்தப்பட்ட பிரதி நிதி என்று நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் உங்கள் போதகருக்கு முன் பாக அல்ல, தேவனுக்கு முன்பாகவே காரியங்களை மூடி மறைக்கின்றீ ர்கள் என்பதை மறந்து விடாதிருங்கள். அப்படி உங்கள் போதகர் தேவ னால் நியமிக்கப்படவில்லை என்றால், ஏன் அவரை உங்கள் போதகராக கொண்டிருக்கின்றீர்கள்? எனவே, உங்கள் வாழ்க்கையில் நன்மை நடக் கும்படிக்கு தேவன் நியமித்த ஒழுங்குகளை கனப்படுத்துங்கள் அப் போது தேவனை கனப்படுத்துவீர்கள் என்றான். நீங்கள் பாடசாலையை மாற்றலாம். சபையை விட்டு இன்னுமொரு சபைக்கு செல்லலாம். ஊரைவிட்டு இன்னுமொரு ஊருக்கு செல்லலாம். தேவனுடைய ஆவி க்கு மறைவாக எங்கே செல்வீர்கள் என்று அறிவுரை கூறினான். பிரிய மானவர்களே, தேவனுக்கு முன்பாக உண்மையாக நடந்து கொள்ளு ங்கள் அப்போது நீங்கள் தேவபிள்ளைகளுக்குரிய ஆசீர்வா தத்தை பெற்றுக் கொள்வீரகள்.

ஜெபம்:

என் நினைவுகளை ஆராய்ந்தறிகின்ற தேவனேஇ நீர் நியமி த்திருக்கும் ஒழுங்குகளை முழு மனதோடு நான் ஏற்றுக் கொண்டுஇ உம் வார்த்தையின் வழியிலே வாழ்ந்து ஜெயம் கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - லூக்கா 10:16