புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 18, 2022)

ஒரே சரீரத்தின் அவயவங்களாயிருக்கின்றோம்

எபேசியர் 4:25

பொய்யைக் களைந்து, அவ னவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்.


ஆதிச் திருச்சபையிலே, விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை. நிலங்களையும் வீடுக ளையும் உடையவர்கள் தங்கள் சுய விருப்பப்படி அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையா னதற்குத்தக்கதாய்ப் பகி ர்ந்துகொடுக்கப்பட்டது. அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறை வாயி ருந்ததில்லை. இந்த சம்பவ மானது, எந்த ஒரு விசுவாசியின் மீதும் திணி க்கப்படவில்லை, பரிசுத்த ஆவியின் நிறைவு அங்கே இருந்ததாதல், ஒவ் வொருவரும் தங்கள் சொந்ததீர்மானத்தின் படியே மனப்பூர்வமாக செய் தார்கள். அனனியாவும் அவனுடைய மனைவியாகிய சப்பீராளும் தங் கள் காணியாட்சியை விற்றார்கள். இது அவர்களுக்கு சொந்தமான காணி யாட்சி. அதை விற்க முன்பும் அவர்களுடையதாகவே இருந்தது. விற்ற பின்பும்கூட அதன் கிரயம் அவர்களுக்கே சொந்தமாக இருந்தது. அதை விற்று மற்றய விசுவாசிகளோடு பகர்ந்து கொள்ளும்படிக்கான எந்த நிர் பந்தமும் அவர்களுக்குஇருக்கவில்லை. அவர்கள் உள்ளத்திலே பொரு ளாசை இருந்தது அதே வேளையிலே மற்றவர்களைப் போல தாங்க ளும் யாவற்றையும் கொடுத்தோம் என்று இருக்க வேண்டும் என்ற எண் ணமும் அவர்களிடம் இருந்தது, தன் மனைவி அறிய அவன் கிரயத் திலே ஒரு பங்கை வஞ்சித்து வைத்து, தாங்கள் எல்லாவற்றையும் தேவ னுக்கென்று கொடுத்தோம் என்று பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்சொ ல்லும்படி, சாத்தான் அவர்கள் இருதயத்தை நிரப்பினான். அவர்கள் மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய்சொன்னதால் அன்றைய தினமே மரித்துப் போனார்கள். பிரியமானவர்களே, இது காணிக் கையை குறித்த தியானம் அல்ல. கர்த்தருடைய சமுகத்திலே, விசுவாசிகள் மத்தியிலே பொய்களை கூறவும், இராஜதந்திரமாக நடந்து கொள்ளும்ப டிக்கும் இன்றும் விசுவாசிகளில் சிலர் துணிகரம் கொள்ளுவதால். இவர்கள் தங்களுக்குள் ஜீவனற்றவர்களாய், ஆவிக்குரிய வாழ்க்கை யில் உணர்வற்ற இருதயமுடையவர்களாக மரித்துப் போயிருக்கின் றார்கள். பொய் நாவும், மாயமான பேச்சும் நீதிமான்களுக்கு தகுதியானதல்ல. எனவே உள்ளதை உள்ளதென்றும் இல்லாததை இல்லாத தென்றும் உண்மையையே என்று பேசிக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கும்படி அழைத்த தேவனே, உம்முடைய சாயலாக சிருஷடிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்தவர்களாய் உண்மையை தெளிவாக பேசும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - அப்போஸ்தலர் 5:4