புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 17, 2022)

நித்திய ஜீவனைத் தெரிந்து கொள்வோம்

ரோமர் 2:7

சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.


குறிப்பிட்ட ஒரு தேசத்திலே இருந்த விளையாட்டுத் துறையின் அதிகா ரிகள், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலே பங்கு பெறுவதற்கெ ன்று பிரத்தியேகமான ஒரு விளையாட்டு குழுவை ஏற்படுத்தி, அந்த குழுவிலே இடம்பெறும்படிக்கு திறமையுள்ள பலரை தெரிவு செய் தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதே அவர்களு டைய பிரதான நோக்கமாகயிருந்தது. அதில் இடம்பெறும் யாவருமே ஆயத் தமாவதற்கு தேவையான வசதிகள் யாவும் ஆயத்தப்படுத்தப்பட்டிருந்தது. பயிற்சிகள் ஆரம்பிப்பதற்கு முன்ன தாக தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் யாவரும் சில ஒழுங்கு முறைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏற்றுக் கொண்டவர்கள், ஏற்றுக் கொண்ட ஒப் பந்ததத்தின்படி உடனடியாகவே தங் கள் வாழ்கையை ஒழுங்குபடுத்தி, பயிற்சிகளை ஆரம்பிக்க வேண்டும். இதற்கொத்ததாகவே, நாம் மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழே தண்ணீலும் இருக்கின்ற எல்லா நாமத்திற்கு மேலான நாமமுடையவரான தேவ குமாரனாகிய இயே சுவின் சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு நம்மை தேவனானவர் முன்குறித் திருக்கின்றார். சற்று இந்த வார்த்தையை சிந்தித்துப் பாருங்கள். ஆண் டவர் இயேசுவின் சாயலை அடைவதைவிட மேன்மையான காரியம் ஒன் றுமே இல்லை. அந்த பரலோக மேன்மையை நாம் அடையும்படிக்கே நம்மை தேவனானவர் தெரிந்திருக்கின்றார். எவர்களை முன்குறித்தா ரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர் களை நீதிமான் களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினா ரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார். நம்முடைய தெரிவுக்கு தேவையான யாவற்றையும் நமக்கு கொடுத்திருக்கின்றார். சத்திய ஆவி யானவர் சகல சத்தியத்திலும் நம்மை நடத்த ஆயத்தமுள்ளவராக இருக் கின்றார். எனவே, இப்போது தெரிவு நம்முடையது. நாம் எதைத் தெரி ந்து கொள்ளப் போகின்றோம்? கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழை த்த பரமஅழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடர ஆயத்தமா? ஜீவனுக்குப் போகிற அந்த இடுக்கமான வாசல் வழியாய் பிரவேசிக்க ஆயத்தமா? சோர்ந்து போகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு தேவன்தாமே நித்தியஜீவனை அளிப்பார்.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று என்னை தெரிந்து கொண்ட தேவனே, உம்மோடு வாழும் வாழ்க்கையின் மேன்மையை நான் உணரத்தக்கதாகவும், உம்மையே பற்றிக் கொள்ளத்தக்க என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 16:5