தியானம் (ஆவணி 16, 2022)
இளைப்பாறுதல் தரும் தேவன்
மத்தேயு 11:28
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
தேவனாகிய கர்த்தர் தம்முடைய திட்டங்களை மனிதர்களிடத்திலே திணி ப்பவர் அல்லர். அவர் மனிதனை சுயாதீனமுள்ளவனாக சிருஷ;டித்தார். நன்மையானவைகளை தெரிந்து கொள்ளுடிக்கு தேவ ஆலோசனையை கூறினார். அவன் பாவம் செய்தபோதும், அவன் பாதாளத்திலே அழிந்து போகாதபடிக்கு, மறுபடியும் இழ ந்து போன தேவ சாயலை பெற் றுக் கொள்ளும்படிக்கான வழியை ஏற்படுத்தி, யாவரும் அந்த வழிக் குளாக வரும்படியாக அழைக்கின் றார். 'வருத்தப்பட்டுப் பாரஞ் சும க்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங் களுக்கு இளைப்பாறுதல் தரு வேன் என்று ஆண்டவர் இயேசு கூறியிருக்கின்றார்.' 1. சூரியனுக்குக் கீழே மனுஷன் படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுக்குப் பலன் என்ன? எல்லாம் வருத்தத்தினால் நிறைந்திருக்கிறது; அது மனுஷரால் சொல்லி முடியாது. காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை, கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை. அதனால் சூரியனுக்கு கீழே மனிதர்கள் விருதாவாக பெரும் பிரயாசப்பட்டு, வருதப்பட்டு உழைத்து, இளைத் துப் போய் இருக்கின்றார்கள் என்று படைத்தவர் அறிந்திருக்கின்றார். 2. இளைப்பாறுதல் எங்கே கிடைக்கும்? யார் அதைக் கொடுப்பார்கள் என்று மனிதர்களுக்கு தெரியாது. எனவே மனிதனை மண்ணால் உரு வாக்கி அவன் மேல் ஜீவசுவாசத்தை ஊதிய தேவனானவர்;, இளைப்பா றுல் எங்கே கிடைக்கும் என்றும் அதை யார் பெற்றுத் தருவார் என்றும் தெளிவாக காண்பிக்கின்றார். 3. தம்மிடத்தில் சேர்கின்றவர்களை தாம் புறம்மே தள்ளுவதில்லை என்றும் அவர்களுக்கு இளைப்பாறுதல் உண்டு என்ற வாக்குத்தத்தத்தை கொடுத்திருக்கின்றார். 4. இந்த அழைப்பானது, வாக்குத்தத்தமுள்ளதும், இந்த உலக ஆஸ்தி, கல்வி, அந்தஸ்தினால் பெற்றுக் கொள்ள முடியாததும், மிகவும் கனமுள்ளதும், விலை மதிக்க முடியாததுமான அழைப்பு. ஆனால், அந்த பெரிதான அழைப்பை ஆண்டவர் இயேசு இலவசமாக கொடுக்கும்படி தீர்மானம் செய்திரு க்கின்றார். இப்பொழுது இளைப்பாறுதலை தேடி அழையும் சுயாதீன முள்ள மனிதர்கள், தங்களுடைய தெரிவு என்ன என்பதை தீர்மானம் செய்ய வேண்டும். ஆண்டவர் இயேசுவின் அழைப்பை ஏற்றும் அவர் பின்னே செல்லும்படி தீர்மானம் செய்தால், அவர்கள் தங்கள் ஆத்துமாவிற்று இளைப்பாறுதலை பெற்றுக் கொள்கின்றார்கள்.
ஜெபம்:
பரலோக தேவனே, உம் சத்தத்தை கேட்டு உம்மையே பின்பற்றி வருகின்றவர்களுக்கு நித்திய இளைப்பாறுதலை கொடுப்பேன் என்னும் உம்முடைய தீர்மானத்தை நான் பற்றிக் கொண்டு உம் ஜீவ வழியில் நட க்ககிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - யோவான் 10:27-28