புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 15, 2022)

வாழ்க்கையின் தீர்மானங்கள்

2 பேதுரு 1:10

ஆகையால், சகோதரரே, உங் கள் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்;


ஒரு மனிதனானவன் தன் தாயின் கர்ப்பத்திலே உருவாகிய நாள் முதற் கொண்டு, அவனுடைய வாழ் நாட்களிலே பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. அவைகளில் சில அவனுடைய கட்டுப்பாட்டிற்கும் தெரி வுக்கும் உட்பட்டதல்ல. எடுத்துக்காட்டாக, நம்முடைய பெற்றோர் யார் என்பதை நாம் தீர்மானம் செய்ய முடியாது. நாம் எந்த ஊரிலே வாழ் ந்தாலும், உயிருள்ளவரை இந்த உலகிலேதான் வாழ வேண்டும். சில சந்தர்ப்பங்களிலே நாட்டின் சட்டதிட்டங்களால் நாம் இருக்கும் இடத்தை மாற்றிக் கொள்ள முடி யாது. ஆனால், மனிதனாவனுடைய தெரிவுக்கும் கட்டுப்பாட்டிற்கும் உட் பட காரியங்கள் பல உண்டு. அவை களை குறித்து ஒவ்வொரு மனித னும் எச்சரிக்கையுள்ளவனாக இருக்க வேண்டும். அவற்றுள் ஒரு சில உதாரணங்களை இன்று நாம் தியானத்திற்கு எடுத்துக் கொள்வோம். சில வேளைகளிலே, வேலை, திரு மணம், நண்பர்கள், நாங்கள் செல் லும் சபை ஐக்கியம், வசிக்கும் ஊர், வீடு போன்றவைகள் நம்முடைய தெரிவிற்கு உட்பட்டிருக்கின்றது. ஆபிரகாம் என்னும் மனிதன் தன் மக னானவனுக்கு, மனைவியை தெரிந்து கொள்ளும் விஷயத்திலே தேவன் கொடுத்த வாக்குத்தத்தத்திற்குள்ளே செயற்பட்டான். அவனுடைய பேரனான ஏசா என்னும் மனிதன், தன் பெற்றோருக்கு விசனமுண்டா க்கும்படி தனக்கென்று பெண்களை தெரிந்து கொண்டான். ஆபிரகாம் தான் வசிக்கும் இடத்தை தேவனுடைய வாக்குத்தத்திற்குள் தெரிந்து கொண்டான். அவனுடைய இனத்தானாகிய லோத்து என்பவன், சோதா முக்கு அருகிலே தன் வாசஸ்தலத்தை தெரிந்து கொண்டான். நாமும் நம் முடைய வாழ்க்கையிலே தெரிவுகளை செய்யும் போது, பிரச்சனைக ளைவிட்டு ஓடுவதற்காகவோ, மற்றவர்களுக்கு பாடம் கற்பிப்பதற்கா கவோ அல்லது நம்மை நாம் நீதிமானாக காட்டிக் கொள்வதற்காகவோ தெரிவுகளை செய்துவிடக்கூடாது. நாம் நம்முடைய வாழ்க்கையிலே நித் திய ஜீவன்வரைக்கும் நிலைநிற்கின்ற காரியங்களையே தெரிந்து கொள் ளும்படியே நம்முடைய ஆண்டவராகிய இயேசு விரும்புகின்றார். ஒரு காரி யத்தைக் குறித்து மனக்குழப்பங்களும், கேள்விகளும், சந்தேகங்களும் எழும்பும் போது பொறுமையோடும், தாழ்மையோடும், கீழ்படிவோடும், வேத வசனங்களை வாசித்து, ஜெபம் செய்யுங்கள். தேவ ஆலோசனை களை கூறுகின்றவர்களிடம் பேசுங்கள். தேவ ஆவியானவர்தாமே நல்ல தீர்மானங் களை எடுப்பதற்கு நிச்சயமாக வழிநடத்திச் செல்வார்.

ஜெபம்:

தேவனாகிய கர்த்தாவே, என் வழியை நான் உமக்கு ஒப்புவித்து, உம்முடைய வார்த்தையின்படி உம்முடைய வேளைக்காக காத்திருக்கும்படி பொறுமையுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 37:5