புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 14, 2022)

அழைப்புக்களை ஆராய்ந்து பாருங்கள்

மத்தேயு 6:33

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்


அடுத்த ஆண்டிலே என்ன செய்யபட வேண்டிய காரியங்கள் மற்றும் வருங்காலங்களிலே வேலையை குறித்த மாற்றம் போன்றவற்றிற்காக ஒரு மனிதனாவன் சில நாட்களாக ஜெபித்து வந்தான். இப்படியாக அவன் ஜெபித்துக் கொண்டிக்கும் நாட்களிலே, ஒரு நாள், மதிய இடைவேளையின் போது, அவனுக்கு ஒரு உத்தியோகஸ்தரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த உத்தியோகஸ்தர் அவனை நோக்கி: இப்போது எடுப்பதைவிட இரண்டு மடங்கிற்கும் அதிகமான சம்பளத்துடனும் ஏனைய வசதியக ளுடன் செய்யக்கூடிய வேலையொ ன்று உண்டு. அது உனக்கு இலகு வாகயிருக்கும், நீ அதற்கு ஏற்றவன் என்றும், அதை குறித்த முடிவை குறிப்பிடப்பட்ட தவணைக்குள் தெரிவிக்குமாறும் கூறினார். ஜெப இடை வேளையிலே இப்படிப்பட்ட ஒரு அழைப்பு வந்ததிருக்கின்றதே என்று அதைக் குறித்து அந்த மனிதனாவன் சிந்தித்து ஜெபித்துக் கொண்டிரு ந்தான். அந்த வேiலைக்கு குறித்த பூரண மனச் சமாதானம் மனதிலே இருக்கவில்லை. அந்த வேலையை ஏற்றுக் கொண்டால், அவன் செய்து வரும் தேவ ஊழியங்களிலே மாற்றங்கள் உண்டாக வேண்டும். வாரந் தோறும் மாலையிலே அவன் குடும்பத்தோடு சென்று வரும் ஜெப கூட்ட ங்களுக்கு சமுகமளிக்க முடியாது போகலாம். இப்படியாக ஆன்மீக வாழ்க்கையின் நிகழ்வுகளோடு அந்த வேலை சற்று முரண்பட்டதாக இரு ந்ததால், அந்த அழைப்பை அவன் நிராகரித்துக் கொண்டான். பிரியமான வர்களே, ஆண்டவராகிய இயேசு இரவும் பகலும் நாற்பது நாள் உபவா சமாயிருந்த பின்பு, சோதனைக்காராகிய சாத்தான் அவரை சோதித் தான். உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: நீர் சாஷ;டாங்கமாய் விழுந்து, என்னைப் பணி ந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன் னான். ஆனால் ஆண்டவர் இயேசுவோ தம்முடைய பரம அழைப்பு என்ன என்பதையும், உலத்தினால் உண்டாகும் அழைப்பு என்ன என்பதையும் அறிந்திருந்தார். அதனால் அவர் சாத்தானை ஜெயம் கொண்டார். இந்த உலகத்தால் உங்களுக்கு அழைப்புக்கள் வரும்போது, அது எவ்வளவு கவர்சியுள்ளதாக இருந்தாலும், முதலாவதாக தேவ வார்த்தையின் வெளிச்சத்திலே அவைகளை ஆராய்ந்து பாருங்கள். இந்த உலகத்தின் தேவைகளை சந்திப்பதற்காக, ஆன்மீக வளர்சியின் அடிப்படைக் காரிய ங்களை தள்ளிவிடுவது, நாம் நம் வாழ்வில் எதை மேன்மைப்படுத்து கின்றோம் என்று நமக்கு தெரிவிக்கின்றது.

ஜெபம்:

என் தேவைகள் என்ன என்று அறிந்த தேவனேஇ நான் எப்போதும் என் வாழ்விலே உம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவதையே மேன்மையானதாக காத்துக் கொள்ளும்படி உணர்வுள்ள இருதயத்தை தந்தருள் வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 6:27