புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 13, 2022)

தேவனுடைய உறவிலே நிலைத்திருங்கள்

1 யோவான் 5:18

தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான்.


மாலை நேரத்திலே தெருவோரமாக, வாலிப்பிரயாத்தை அடையவிருக் கும் சிறுவர்கள் சிலர் கூடி விளையாடுவது வழக்கமாக இருந்தது. சில நாட்கள் சென்ற பின்பு, அயலிலுள்ள வேறு சிறுவர்கள் அவர்களோடு இணைந்து கொண்டார்கள். வீட்டிற்கு அருகிலேயே அவர்கள் விளை யாடிக் கொண்டு வந்ததால், அவர்களுடைய பெற்றொர்களும் அதைக் குறித்து பெரிதாக அவ்வப் போது சேர்ந்து சிறிது நேரம் விளையாடி விட்டு சென்றார் கள். பெரிய அண்ணாமாரும் தங்களோடு சிறிது நேரம் விளையாடு வதையிட்டு அந்த சிறுவர்கள் பரபரப் படைந் தா ர்கள். சில கிழமைகள் சென்ற பின்பு, அந்த வாலிபர்கள், அங்குள்ள சிறு வர்களை நோக்கி: விளையாட்டு நல்லதுதான், ஆனால் படிப்பை கவனி த்துக் கொள்ளுங்கள். கணித, விஞ்ஞான பாடங்களில் உதவி தேவை யென்றால், சொல்லுங்கள் நல்ல உதவி ஆசிரியர்களை எங்க ளுக்குத் தெரியும் என்று பெற்றோரின் செவியில் கேட்குமாறும், சத்தமாய் பேசிக் கொண்டார்கள். அதை கேட்டுக் கொண்ட பெற்றோர்களில் சிலர், அந்த வாலிபர்களுக்கு நன்றியைத் தெரிவித்து, மாலை நேரங்களிலே அவர்க ளுக்கு குளிரூட் ப்பட்ட மென்பானங்களை வழங்கி ஆதரித்தார்கள். சில மாதங்கள் சென்றபின்பு, அங்கு விளையாடிவந்த சில சிறுவர்கள் போதை வஸ்து கொடுக்கல் வாங்களிலிருந்து கையும் களவுமாக பிடிபட்டிருக் கின்றார்கள் என பாடசாலையிலிருந்து பெற்றோருக்கு நம்பமுடியாத மிகவும் அதிர்ச்சியான செய்தி வந்தது. ஆம், மாலை நேரங்களிலே அங்கே வந்த வாலிபர்கள் எங்கே இருந்த வந்தார்கள் என்று தெரியாது. அவர்கள் இப்போ எங்கே இருக்கின்றார்கள் என்றோ, அவர்களுடைய பெயர் விலாசங்கள் என்னவென்றோ யாருக்கும் தெரியாது. பிரியமான வர்களே, உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்று நாம் அறிந்திருக்கிறோம். அதனால் நாம் யாவரையும் சந்தேகக் கண்ணுடன் பார்த்து பயப்பட வேண்டும் என்பது பொருள் அல்ல. வஞ்சிக்கும் சாத்தானானவனும் நல்ல வேடம் பூண்டவனாகவே பெலவீனமுள்ளவ ர்களுக்கு கண்ணி வைப்பான். எனவே நம்முடைய ஆண்டவராகிய இயேசு கூறியது போல, நாம் விழித்திருந்து ஜெபம் பண்ணுகின்றவர்க ளாக இருக்க வேண்டும். வேதத்தை வாசித்து தியானிக்க வேண்டும். தேவனுடைய சத்தத்தை கேட்டு உணரத்தக்கதாக நாம் அவரோடுள்ள உறவிலே தினமும் உறுதியாக இருக்க வேண்டும். அவர் நம்மை எல்லா பொல்லாப்பிற்கும் விலக்கி காப்பார்.

ஜெபம்:

பொல்லாப்பு நேரிடாதபடி எங்களை காக்கும் தேவனே, வஞ்சை யின் வலையிலேந நாங்கள் விழுந்து போதாதபடிக்கு எங்கள் வழிகளிலெல்லாம் எங்களைக் காக்கும்படி, உம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 26:41