புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 12, 2022)

கண்ணிகளில் சிக்கிய பறவைகள்

சங்கீதம் 91:3

அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார்.


அழகான சில பறவைகள் ஒரு மரத்தின் கீழே, சுதந்திரமாக நின்று இரையை கொத்தி தின்று கொண்டிருந்தது. அதனால் மற்ற பறவைக ளும் கவரப்பட்டு அந்த இடத்திற்கு வந்தன. ஆனால் மரத்தின் கீழே இருந்த சில பறவைகளை சுற்றி மெல்லிய வலைப்பின்னலுள்ள கூட்டை மற்றய பறவைகள் காணா மலும், மரத்தில் கீழே பரப்பபட்டிருக்கும் இலைகளோடு இலைகளாக விரிக் கப்பட்டிருக்கும் வலையைக் குறி த்து உணராமல், பல பறவைகள் அந்த இடத்திற்கு வந்தன. சில நிமிடங்களுக்கு பின், அருகிலே மரங்களுக்கு பின் ஒளித்திருந்த, வேட்டைக்காரன், தன் கையிலுள்ள கயிற்றை பலமாவும் துரிதமாகவும் இழுத்த போது, அங்கே இரையை தேடி வந்த பறவைகள் யாவும் அவனுடைய கண்ணியிலே அகப்பட்டுக் கொண்டது. இது ஒரு வேடனு டைய வஞ்சகமான கண்ணி. இதற்கொப்பனையாகவே, நம்முடைய எதிரியாகிய பிசாசானவனும், இந்த உலகத்தின் வழியாக மனிதர்களை யும், சில தேவனுடைய பிள்ளைகளையும் வஞ்சிக்கின்றான். நேரடியாக உண்மையை பேசிகின்றவர்கள் அன்பில்லாவர்கள் என்றும், மென்மை யாகவும் இதமாகவும் பேசி, தங்களை சாந்தமுள்ளவர்கள் என்று காண்பித்துக் கொள்கின்றவர்கள் அன்பு நிறைந்தவர்கள் என்பதும் இந்த உலகத்திலுள்ள ஜனங்களின் அபிப்பிராயம். அதனால், கவர்சியான வார்த்தைகளுக்கும், வசீகரமான பேச்சிக்கும் மனிதர்கள் இழுப்பண்டு போகின்றார்கள். இந்த உலக போக்கின் அதிபதியாகிய பிசாசானவன், ஒருபோதும் தான் கொல்லவும் அழிக்கவும் வருகின்றேன் என்று கூறப்போவதில்லை. மாறாக, மனிதர்களை கவர்ந்து கொள்ளும்படிக்கு, ஆபத்து இருக்கும் இடத்தை, புகலிமாக காண்பித்துக் கொள்வான். வேடன் எப்படியாக பறவைகளுக்கு கண்ணியை வைக்கின்றானோ, அப்படியாகவே அவனும், நம் உள்ளத்தை கவரும் கவர்சியானவைகள் வழியாக கண்ணியை வைத்து காத்திருப்பான். யார் அந்த கண்ணியை அறிந்து கொள்வான்? யார் அந்த வஞ்சகனின் கண்ணயிலிருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்? உன்னதமான தேவனை தனக்கு மறைவிடமான கொண்ட மனிதனின் கால்களுக்கு தீபமாகவும், பதைக்கு வெளிச்சமுமாகவும் தேவனடைய வார்த்தைகள் இருக்கின்றது. அதனால் உன்னாமான தேவனை அடைக்கலமாக கொண்டவனை கண்ணிகளில் சிக்கிக் கொள்ளாதபடிக்கு அவர் அவனை இரட்சித்து நடத்துகின்றார்.

ஜெபம்:

பிரகாசமுள்ள மனக்கண்களை தரும் தேவனே, இந்த உலகத் லும் அதிலுள்ளவைகளிலும் அன்புகூராமல், உம்மைப் பற்றிக் கொண்டு, உம்முடை ய வழிகளிலே நடக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 141:8-10