புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 11, 2022)

சமாதானத்தின் சான்றிதழ்

எபேசியர் 2:14

எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி,


ஒரு மனிதனானவன், தான் வாழ்ந்து வந்த ஊரிலே, குழப்பங்களும், பிரச்சனைகளும் அதிகமாக இருந்ததால், தொலைவிலேயுள்ள சீரும் சிறப்புமான தேசமொன்றிற்கு செல்லும்படியாக புறப்பட்டுபோனான். சில நாட்களுக்கு பின்பு, அவன் தாபரிக்கும் தேசத்திற்கு வந்து சேர்ந்த போது, அந்த புதிய தேசத்திலேயிருந்து எல்லைக் காவல் அதிகாரிகளி னாலே தடுத்து நிறுத்தப்பட்டு, விசாரணைக்குட்படுத்தப்பட்டான். அவன் தன் நிலைமையையும், தான் எந்த ஊரிலிலுருந்து பிரயாணப்பட்டு வந்தேன் என்றும் கூறிய போது, காவல் அதிகாரிகள் உசார் நிலை யடைந்து, அவனை நோக்கி: நீ இருந்து வந்த ஊருக்கும் எங்கள் தேசத்திற்குமிடையே நல்லிணக்கம் இல்லை. உன் ஊரார் எங்கள் தேச த்தின் எதிரிகள் எனவே உனக்கு நீதிமன்றத்தினால், தீர்ப்பு வழங்கப் படும் நாள்வரைக்கும், உன்னை கைது செய்து சிறையிலே போடப் போகின்றோம் என்றார்கள். அதற்கு அந்த மனிதனாவன்: ஐயா, இந்தப் பத்திரத்தை படித்துப் பாருங்கள். இது உங்கள் அரசாங்க தூதரகத்தி னாலே எனக்கும் என் குடும்பத்திற்கு வழக்கப்பட்ட பொது மன்னிப்பின் (யுஅநௌவல) சான்றிதழ் என்றான். அந்த பத்திரத்தை படித்த, அதிகாரிகள், அவனை பாராட்டி, தங்கள் தேசத்திற்குள் வரவேற்றார்கள். பிரியமான வர்ளே, ஏன் இயேசு கிறிஸ்து இல்லாவிட்டால் நாம் சமாதானத்துடன் இந்த உலகத்தை கடந்து செல்ல முடியாது? நித்திய சமாதானமானது பரலோகத்திற்குரியது. மனித குலமனைத்தும், பாவ சாபத்திற்குட்டதால், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களும், பரலோகத்திற்கு பகைஞர்களுமா யிருந்தோம். மீட்பராகிய இயேசு கிறிஸ்துதாமே, நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினை யாகிய நடுச்சுவரைத் தகர்த்து, பகையை சிலுவையினால் கொன்று அடைப்பட்டிருந்த பரலோகத்தின் வாசலை திறந்தார். அவர் மூலமாய் மட்டுமே நாம் பரலோகத்தோடு ஒப்புரவாகும் சிலாக்கியத்தை பெற்றுக் கொள்ளமுடியும். இயேசு கிறிஸ்து நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்க ளாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகார ங்கொடுத்தார். எனவே இந்த உலகத்திலிருந்து பரம தேசத்தை வாஞ் சித்து யாத்திரை செய்யம் யாத்திரிகள் யாவருக்கும், சமாதான காரண ராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளு ங்கள். சமாதானத்துடன் எல்லைத் தாண்டுகள்.

ஜெபம்:

பரலோகத்தின் வாசலை மறுபபடியும் மனித குலத்திற்கு திறந்த தேவனே, ஒப்பரவாக்குதலின் நாம காரணராகிய மீட்பர் இயேசு கிறிஸ் துவை பற்றிக் கொண்டு, உம் சித்தத்தை நிறைவேற்ற கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 14:6