புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 10, 2022)

ஆயத்தம்பண்ணப்பட்ட இரட்சண்யம்

லூக்கா 2:31-32

தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.


உலக தோற்றமுதல் வாக்களிக்கப்பட்டிருந்த இரட்சகருடைய வருகையை தேவ காணும்படி ஜனங்கள் காத்திருந்தார்கள். ஏனெனில் இரட்சகரையல்லாமல் மனித குலத்திற்கு, பரலோக சமாதானம் இல்லை என்று அவ ர்கள் அறிந்திருந்தார்கள். இரட்சகராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியிலே உதித்தபோது, குழந்தையை தேவனுக்கென்று ஒப்புக் கொடுக்கு மாறு ஆலயத்திற்கு கொண்டு சென்றார்கள். அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதி யும் தேவபக்தியும் உள்ளவனாயும், தேவ ஜனங்களின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன் மேல் பரிசுத்தஆவி இருந் தார். இரட்சகராகிய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது. அந்நாட்களிலே, அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். குழந்தையாக இருந்த இயேசுவை அவன் கண்டபோது, அவன் அவரைத் தன் கைக ளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து: ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்;. புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்மு டைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான். வயது முதிர்ந்த சிமியோன், அநேக வருடங்களாக இந்த நாளிற்காக காத்திருந்தான். தேவனால் வாக்களிக்கப்பட்ட மனித குலத்தின் இரட்சண்யத்தை காண்பதும், அவரை தன் கைகளிலே ஏந்துவதும் எத்தனை பாக்கியம். இரட்சண்யத்தை அவன் கண்டதினாலே, மரணத்தைக் குறித்து கலக்கமில்லாமல், மனத்தைரியத் தோடும், பூரண சமாதானத்தோடும் அடியேனை போவிடும் என்று தேவ சந்நிதியிலே அறிக்கையிட்டான். பிரியமானவர்களே, மனித குலமானது பாவத்திலே அழிந்து போகாமல், இரட்சிப்படையும்படி, தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்திலே வெளிப்பட்டார். எந்த மனிதனும், தான் மரணமடையும் நாளிலே, மனத்தைரியத்தோடும், பூரண சமாதானத்தோடு இந்த உலகத்தை விட்டுச் செல்ல விரும்பினால், பாவ மன்னி ப்பின் நிச்சயத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். அதை இரண்டசண்ய மாகிய இயேசு கிறிஸ்து வழியாக மட்டுமே பெற்றுக் கொள்ளலாம்.

ஜெபம்:

என் ஆத்துமா பாதாளத்திலே அழிந்து போவதை விரும்பாத தேவனே, பரலோகத்திலே உம்மையல்லாமல் எனக்கு வேறுயாருமில்லை. நீர் என்மேல் காட்டும் அன்பிற்கு நன்றி. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 15:5