புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 09, 2022)

தேற்றும் ஆவியானவர் உங்களுக்குள்ளே...

1 தெச 4:18

ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரை யொருவர் தேற்றுங்கள்.


இழப்புக்கள் மனிதர்களுடைய இருதயத்திலே தாங்கொண்ணா வேத னையை உண்டு பண்ணுகின்றதாயிருக்கின்றது. அந்த அனுபவத்திற் கூடாக சென்றவர்களே அதன் கொடூரத்தை அறிந்திருக்கின்றார்கள். சில வேளையிலே, மனிதர்கள் மற்றய மனிதர்களை நியாயந்தீர்த்து விடுகி ன்றார்கள். அதெப்படியெனில், இன்னார், வெகுவாய் வேதனைப்பட்டு மரணமடைந்தார், அதற்கு காரணம் இதுதான். அவருடைய மகனான வன், இளவயதிலே அகால மரண மடைந்தான், அது இன்ன காரிய த்திற்காக நடந்தது என்று, நியா யாதிபதிகளாக மாறிவிடுகின்றார் கள். பிரியமானவர்களே, இது நம க்கு தகுதியானதுமல்ல, நம்முடைய காரியமும ல்ல. நாளை நமக்கோ, நம்முடையவர்களுக்கோ, என்ன நடக்கும் என்பதை ஒருவரும் அறிய மாட்டார்கள். எனவே, இழப்புக்களினால், சோர்ந்து வஞ்சிக்கும் சாத் தானாவன் மனிதர்களுடைய இருதயத்தில் பின்மாற்றமான வித்துக்களை விதைக்காதபடிக்கு, தேவ வார்த்தைகளினாலே ஒருவரை ஒருவர் தேற்றி, ஒருவருக்காக ஒருவர் ஊக்கமாக ஜெபம் செய்யுங்கள். இவை ளைக் குறித்து தேவ ஊழியராகிய பவுல், அழகாக வர்ணித்து கூறி யிருக்கின்றார். 'அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித் தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்து, அறிவில் லாதிருக்க எனக்கு மனதில்லை. இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே. அப்படியே இயேசுவுக்குள் நித்திரை யடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவரு வார். கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள் மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்வி தமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்' என்றார். தேவ ஆவியா னவர் நம்மை தேற்றும் தெய்வமாக இருக்கின்றார். அந்த தேவ ஆவி யை பெற்ற நாமும், மற்றவர்களுடைய துன்பத்திலே அவர்களை ஆற் றித் தேற்றுகின்றவர்களாக இருக்க வேண்டும். வாக்குக்கடங்கா பெருமூ ச்சுகளோடு மற்றவர்களுக்காக வேண்டுதல் செய்யவோமாக.

ஜெபம்:

இளைப்பாறுதல் தரும் தேவனே, வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்யும் தேவ ஆவியானவரை பெற்றி ருக்கும் நாமும், மற்றவர்களுக்காக வேண்டுதல் செய்யும் உள்ளத்தை தந்தருள்வீ ராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 8:26

Category Tags: