புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 08, 2022)

கிறிஸ்துவின் சாயல்

அப்போஸ்தலர் 7:60

ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தா திரும் என்று மிகுந்த சத்த மிட்டுச் சொன்னான்


அவன் எனக்கு செய்த அநியாயத்தை இந்த ஊர் முழுவதுமே அறிந் திருக்கின்றது. அதற்கேற்ற தண்டனையை அவனும் அவனுடைய குடும் பத்தாரும் அறுப்பார்கள். ஆண்டவர்தாமே, அவன் செய்த துரோக த் திற்கு பதில் செய்வார் என்று ஒரு மனிதனானவன் சொல்லிக் கொண் டான். அதாவது, அந்த மனிதனானவனுக்கு அநியாயம் நடந்தது ஊரறி ந்த உண்மை. ஆனால், அவனோ, 'நான் அவனைப் பழி வாங்க மாட் டேன், கர்த்தர் பதில் செய்வார்' என்று தீமை செய்த அந்த அயலவ னுக்கு தீமை நடக்கும்வரை பொறு மையாக இருப்பதினால் தான் தேவ னுக்கு பயப்படுகின்ற கிறிஸ்தவன் என்று அந்த மனிதனாவன் எண்ணிக் கொண்டான். பிரியமானவர்களே, அநியாயமும், துரோகமும் செய்த வர்களை மனித பெலத்தினால் மன்னி ப்பது மிகவும் கடினமான காரியம், சில வேளைகளிலே சாத்தியமற்றது. அதனால், மனிதர்கள் பழிவாங்குதலை, தங்கள் கரங்களில் எடுத்துக் கொள்ளாமல், சட்டம் குற்றம் செய்தவர்களை தண்டிக்கட்டும் அல்லது தேவ நீதி வெளிப்படட்டும் என்று, பழிவாங்குதலை தங்கள் இருதயங்க ளிலே பதித்து வைத்து விடுகின்றார்கள். சட்டவிரோதமான நடவடிக் கைகளிலே கையும் களவுமாக அகப்பட்டவர்கள், நாட்டின் அதிகாரங்கள் தண்டிக்கும் போது நாம் ஒன்றும் செய்ய முடியாது அல்லது ஒருவனு டைய அக்கிரம் மிகுதியானதினாலே தேவ நீதி வெளிப்பட்டால், தேவன் நிச்சயித்ததை நாம் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், நாம் வாழ்வி லும் சாவிலும் கிறிஸ்துவின் சாயலிலே இணைந்து கொள்ள வேண்டும். ஸ்தேவான் என்னும் தேவ ஊழியர் கிறிஸ்துவின் இரட்சிப்பின் நற்செய் தியை அறிவித்து வந்தான். அதனால் மூர்க்கம் கொண்ட யூத மதத்த லைவர்கள், குற்றமில்லாத தேவ பிள்ளையாகிய ஸ்தேவானை, நகரத்து க்குப் புறம்பே தள்ளி அவனைக் கல்லெறிந்தார்கள். ஸ்தேவானோ முழ ங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சும த்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான். தன்னை சிலுவையிலறைந்த மனிதர்க ளை இயேசு கிறிஸ்து மன்னித்தது போல, ஸ்தேவானும் தன் மரணத்திலும் கிறிஸ்துவின் சாயலிலே இணைந்து கொண்டான். இது தேவ ஆவியி னாலே சாத்தியமாயிற்று. நாமும் தேவ ஆவியானவருக்கு இடம் கொடுத்தால், நாமும் கிறிஸ்துவின் திவ்விய சுபாவத்தை தரித்துக் கொள்ளலாம்.

ஜெபம்:

அன்பின் தேவனே, ஒருவரும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்னும் தேவ சித்தத்திலே நானும் இணைந்து கொள்ளும்படிக்கு என் மனக் கண்களை திறந்து விடுவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபேசியர் 4:31-32