புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 07, 2022)

புதிதும் பெரிதுமான ஆதாயம்

பிலிப்பியர் 1:21

கிறிஸ்து எனக்கு ஜீவன்இ சாவு எனக்கு ஆதாயம்.


கண்ணாலே கண்ட கொடுமைகளும், வாழ்க்கையிலே அனுபவித்த பாடு களும், சொந்த பந்தங்;களால் ஏற்பட்ட மனப்புண்களும் போதும், இனி இந்த பூமியிலே வாழ்வேது, நான் என் பரமன் இயேசுவோடு போய் விட்டால் போதும் என்று ஒரு மனிதனானவன் மனக்கசப்போடு கூறிக் கொண்டான். இப்படிப்பட்ட கதை வசனங்கள் ஒருவேளை பேசுவத ற்கும், கேட்பதற்கும் அர்த்தமுள்ளதாக தோனறலாம், ஆனால் இது ஒரு கிறிஸ்தவனின் கதைவசனமாக இரு க்க முடியாது. தேவ ஊழியராகிய பவுல் என்பவர்: கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம் என்று தனக்கேற்பட்ட துன்பங்களினித்த மாய், ஒரு சோகக் கதையைப் போல இதை கூறவில்லை. நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொ ழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும். ஆகிலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் கிரி யைக்குப் பலனுண்டாயிருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன். ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்க ப்படுகிறேன், தேகத்தைவிட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்;. அப்படியிரு ந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம் என்று பிலிப்பிய நாட்டைச் சேர்ந்த சபை விசுவாசிகளை திடப்படுத்தினார். நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண் ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன். கிறி ஸ்தவனாக வாழ்ந்து பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை தன்; வாழ் வில் நிறைவேற்ற பிரயாசப்படும் போது, அதனால் வரும் உபத்திரவங் களை, கிறிஸ்துவை அறியும் அறிவின் மேன்மைக்காக ஏற்றக் கொண்;; டார். அதுபோல நாமும், உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசி யோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற் றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிற தேவனாலே முற்றும் ஜெயங் கொண்டு, மனக் கசப்போடு அல்ல, மனநிறைவோடு மகிமையிலே பிர வேசிக்கின்றவர்களாக இருக்கின்றோம். சாவு என்பது பரமன் இயேசு வோடு வாழும் நமக்கும் நித்திய வாழ்வின் ஆரம்பமாக இருக்கின்றது. அது நமக்கு பெரிதான ஆதாயமாயிருக்கின்றது.

ஜெபம்:

நீதியுள்ள தேவனே, என் குடும்பத்திலே நான் சமாதானத்தை கெடுத்துப் போடுகின்றவனா(ளா)க அல்ல, கிறிஸ்துவைப் போல சமாதா னத்தை உண்டு பண்ணுகின்றவனா(ளா)க வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபேசியர் 5:22-23

Category Tags: