புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 06, 2022)

அந்த ஆற்றை நாம் கடக்கும் போது...

யோவான் 14:18

நான் உங்களைத் திக்கற்ற வர்களாக விடேன்,


இந்தப் பாடத்தின் ஒரு பகுதி எனக்கு பிடிக்காது. அதைப் படிக்க என க்கு விருப்பவில்லை, நான் படித்தாலும் என் மனம் அங்கே இருக்காது என்று ஒரு மாணவன் தன் ஆசிரியரிடம் கூறினான். ஆசிரியர் சிரித்து விட்டு, அவனை பார்த்து: தம்பி, உனக்கு பிடித்ததோ இல்லையோ, நீ படிக்கின்றாயோ இல்லையோ, இந்தப் பகுதி தவிர்க்க முடியாதது. நிச்சயமாக ஆண்டிறுதிப் பரீட்சை யில் கேள்வி வரும். அது உன்னுடை யதோ அல்லது என்னுடைய தோ தெரிவு அல்ல. எனவே, நீ பாடத்தில் சித்திபெறும்படிக்கு, மனதை மாற் றிக் கொண்டு, உதவிகளை பெற்று படித்துக் கொள் என்று ஆசிரியர் அறிவுரை கூறினார். ஆம், பிரியமான வர்களே, நம்முடைய கிறிஸ்த விசுவாச வாழ்க்கையிலும் கூட, சிலர், இந்த உலகத்தைவிட்டு நாம் கடந்து போகும்பகுதியை பற்றி பேசுவதற் கோ, சிந்திப்பதற்கோ விரும்புவதில்லை. ஆனால் இந்த நிகழ்வு ஒவ்வொ ருவருடைய வாழ்க்கையிலும் நிச்சயமாக இடம்பெறுகின்றதாயிருக்கி ன்றது. அதனால் மரணம் ஒருநாள் நம்மை சந்திக்கும் என்று, அதையே ஒவ்வொரு நாளும் சிந்தித்து, துக்கித்து, கவலையடையந்து கொண்டிரு க்தத் தேவையில்லை. ஆனால், நாம் அதைபற்றிய, அறிவில்லாமல் இருக்கும் போது, துன்பமும், துக்கமும் சூழ்ந்து கொள்ளும் போது, நாம் இந்த உலகத்திலுள்ளவர்கள் போல நடந்து கொள்ளும் போது சோதனைகளுக்கு தள்ளப்பட்டு போகலாம். நாமோ, அப்படியிருக்கலா காது. 'நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன்' என்பது ஆண்ட வராகிய இயேசு கிறிஸ்துவின் வாக்குத்தத்தம். இந்த வகுத்தத்தமானது, ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கோ அல்லது ஒரு காலகட்டத்திற்கோ உரியது அல்ல. மாறாக, இது ஆண்டவராகிய இயேசுவின் தன்மையை யும்இ அவருடைய வார்த்தையை, நம்பியிருப்பவர்களுக்கு அவருடைய பாதுகாப்பையும், வெளிப்படுத்துகின்றது. தேவனுடைய ஆவிக்கு மறைவான இடம் ஒன்றுமில்லை. நாம் வானத்திற்கு ஏறினாலும், அவர் அங்கே இருக்கின்றார். நாம் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், அவர் அங்கேயும் இருக்கின்றார். நம் வாழ்க்கையில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிகளிலும் அவர் நம்மோடு இருக்கின்றவராய் இருக்கி ன்றார். நாம் கடக்க வேண்டிய ஆற்றை கடக்கும் போதும் அது நம்மை சேதப்படுத்தாமல், இளைப்பாறுதலை கொடுக்கின்றவராய் இருக்கி ன்றார். எனவே மரண பயத்தை புறம்பே தள்ளி, ஆண்டவர் இயேசுவை பற்றிக் கொண்டிருங்கள். அவர் ஒருபோதும் நம்மை கைவிடார்.

ஜெபம்:

ஜெபம்: நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை கைவிடுவதுமில்லை என்று சொன்ன தேவனேஇ என் மனதிலுள்ள பயங்களை நீர் நீக்கிஇ உம் மோடு வாழ்வதன் பாக்கியத்தை எனக்கு உணரச் செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 23:6