புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 05, 2022)

நாம் பரலோக வாசிகள்

ரோமர் 14:8

ஆகையால் பிழைத்தாலும் மரி த்தாலும் நாம் கர்த்தருடையவ ர்களாயிருக்கிறோம்.


புறதேசமொன்றிலே வேலை செய்து கொண்டிருந்த தகப்பனானவர், தன் குடும்பத்தைவிட்டு சில காலம் பிரிந்திருக்க வேண்டியதாயிற்று. தன் மனைவியையும் மகனையும் தன்னோடு இணைந்து கொள்ளும்படிக்கு, சட்டபூர்வமாக, குடிநுழைவுக்குரிய காரியங்கள் யாவையும் அவர் செய்து முடித்தார். மகனானவன், தன் உற்றார் உறவினர்களை யும், தன் நண்பர்களையும், விட்டு, புறதேசத்திற்கு செல்வதற்கு பிரி யாவிடை பெறுவது இலகுவான காரியமாக இல்லாதபோதிலும், தன் தகப்பனானவரோடு சேர்ந்து கொள்ளும் நாளையிட்டு மிகுந்த ஆனந்த சந்தோஷத்தோடு இருந்தான். பிரியமானவர்களே, நாமும் நம் முடைய பரம தந்தையை சந்திக்கும் நாளை எதிர்பார்த்து ஓடிக் கொண் டிருக்கின்றோம். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இந்த பூமி யிலே நம்முடைய நாட்களுக்கு ஒரு எல்லையுண்டு. பிள்ளைகள் பாடசா லையிலே படித்து முடித்து, தங்கள் எதிர்காலத்தை நோக்கி வௌ;வேறு வழிகளிலே போகும் போது, பல ஆண்டுகளாக கூடிப் படித்த சக மாண வர்களை விட்டுப் பிரிகின்றார்கள். சில வேளைகளிலே ஒரு வேலையை விட்டு இன்னுமொரு வேலையை நாம் தெரிந்து கொள்ளும் போது, நமக்கு பிரியமான சிலருக்கு பிரியாவிடை கூற வேண்டும். திருமணமாகி பெற்றோரைவிட்டு தனியே செல்லும் போது சந்தோஷம் இருந்தாலும், பிள்ளைகள் பிறந்த வீட்டைவிட்டு போவது மனதிற்கு கடினமாக இருக் கும். இவ்வாறாக, நாம் இந்தப் பூமியைவிட்டு விடைபெறும் நாள் எல் லாவற்றிலும் கடினமும், மனவேதனையுமுள்ள நாளாக இருக்கலாம். ஆனால், நாம் நம்முடைய ஆத்தும நேசரை சந்திக்கும் நாள் சமீபம் என்னும் வாஞ்சையும் மேன்மையும் நம்முள்ளத்திலே பெருக வேண்டும். நாம் இந்தப் பூமியிலே வாழ்ந்தாலும் கர்த்தருக்கென்று வாழ்கின்றோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்த hலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம். சில பரிசு த்தவான்கள் பூரண ஆயுசுள்ளவர்களாக கடந்து செல்கின்றார்கள். ஆனால், ஸ்தேவான் தன் இளவயத்திலேயே கர்த்தரிடத்திலே சென்றார். நம்முடைய ஆண்டவராகிய இயேசுவும் சுமார் 33 வருடங்களிலே பிதா வாகிய தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றி முடித்து, பரலோகம் சென்றார். எனவே, பிதாவின் சித்தத்தை நிறைவேற்றி முடிப்பதும் பர லோகம் செல்வதுமே நம் வாழ்வின் நோக்கம் என்ற அறிவிலும் வாஞ் சையிலும் நாம் தினமும் வளர்ந்து பெருக வேண்டும்.

ஜெபம்:

அன்பும் பெலமும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியை தந்த தேவனே, நீர் எப்போதும் என்னோடு இருக்கின்றீர் என்ற அறிவிலும், மனச் சமாதானத்திலும் நான் தினமும் வளர கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 14:18