புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 04, 2022)

பிரயாசத்தின் பலனை பெற்றுக் கொள்வீர்கள்

தானியேல் 12:3

அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.


உயர்தர வகுப்பின் இறுதி ஆண்டில் கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவர்கள், தேசிய மட்டத்தில் நடத்தப்படும் இறுதிப் பரீட்சையை எழுதி முடித்த பின்பு மாணவர்கள், பரீட்சை முடிவுகளை எதிர்பார்த்து சில மாதங்கள் ஓய்ந்திருந்தார்கள். பரீட்சை முடிவுகள் கல்வித் திணை களத்தினால் வெளியிடப்பட்ட போது, ஒவ்வொரு மாணவர்களும் தங் கள் பிரயாசத்தின் பலனை பெற்றுக் கொண்டார்கள். சிலர் சந்தோஷ மடைந்தார்கள் ஆனால் வேறு சிலரோ துக்கமடைந்தார்கள். பூமி யிலே வாழும் நம்முடைய நாட் கள், உயர்தர வகுப்பில் இறுதி யாண்டில் கல்வி கற்றுக் கொண் டிருக்கும் மாணவர்களின் நிலை மைக்கு ஒத்ததாக இருக்கின்றது. கடைசி காலத்திலே வாழும் நம் முடைய வாழ்க்கையின் முடிவு நாள் உண்டு. அதன்பின்பு, நம் முடைய வாழ்க்கையின் பிரயாசத்தின் பலனை அறுவடை செய்யும் நாட்கள் வரைக்கும் சற்று ஓய்ந்திருப்போம். கிறிஸ்துவுக்கு முன் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த, தேவனுடைய தாசனாகிய தானி யேலுக்கு, கடைசி நாட்களிலே நடக்கவிருக்கும் காரியங்களை தேவ னாகிய கர்த்தர்தாமே வெளிப்படு;தினார். அதன்படிக்கு, பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவ னுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திரு ப்பார்கள். ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என் றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள் என்று கர்த்தர் தம்முடைய தூதன் வழியாக கூறியிருக்கின்றார். இறுதிப் பரீட்சையின் முடிவுகளைக் குறித்து துக்கமடைந்த மாணவர்கள், ஒரு வேளை மறுபடியும் பரீட்சையை எடுத்து தேர்ச்சியடைவதற்கு சந்தர்ப்பங்கள் ஏற் படலாம். அதுபோல, இந்த பூமியிலே வாழும் நாட்களிலே, நமக்கு எண் ணற்ற சந்தர்ப்பங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றது. தேவன் நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராக இருக்கின்றார். ஆனால் நாம் இந்தப் பூமியைவிட்டு கடந்து செல்லும் நாள், நம்முடைய பிரயாசங்களின் இறுதி நாளாக இருக்கும். பிரியமானவர்களே, நாட்கள் பொல்லாதவை களாக இருப்பதனால், ஞானமுள்ளவர்களாய் கவனமாய் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுவோமாக. ஞானவான்கள் ஆகாயமண்டல த்தின் ஒளியைப் போல பிரகாசிப்பார்கள்.

ஜெபம்:

நித்திய மகிமைக்கு என்னை அழைத்த தேவனே, நான் ஞான இருதயமுள்ளனாகயிருக்கும்படிக்கு, என் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்து, உம்முடைய வழியிலே நடக்க கிருபை செய்தருளும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபேசியர் 5:9-21