தியானம் (ஆவணி 01, 2022)
உன்னதமானவரின் பாதுகாப்பு
சங்கீதம் 91:1
உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.
ஒரு ஊரை ஆட்சி செய்து வந்த ராஜாவானவன், அந்த ஊரை சுற்றி பெரிதான அலங்கத்தை கட்டி, அதற்கு வெண்கல கதவுகளைப் போட்டு, தன்னுடைய விசேஷpத்த சேவகர்களை காவலாக வைத்தான். ராஜா வினுடைய அனுகூலமும், பாதுகாப்பும் அந்த ஊர் ஜனங்களுக்கு இருக்கின்றது என்று அறிந்து கொண்ட எதிரிகள் அந்த ஊருக்குள் போவதை தவிர்த்துக் கொண்டார் கள். ராஜாவினுடைய காவலை மீறி ஜனங்களுக்கு தீங்கு செய்ய முய ற்சி செய்கின்றவர்கள், அந்த ஜனங் களை அல்ல ஊரின் காவலை ஏற்படு த்திய அந்த ராஜாவையே அசட்டை செய்கின்றார்கள். அதனால், ராஜாவின் கரம் அவர்களுக்கு விரோதமாக நீட்டப்படும். ஒருவேளை இந்தப் பூமியிலே ஆட்சி செய்கின்ற ராஜாக்களை அவனுடைய எதிரிகள் மேற்கொள்ளலாம் அல்லது ராஜா ஆட்சிசெய்யும் ராஜ்யத்திலே பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். ஆனால், பரலோகத்திலே வீற்றிருக்கின்ற சர்வ வல்லமையுள்ளவரும் கர்த்தாதி கர்த்தரும், ராஜாதி ராஜாவுமாயிருக்கின்ற நம்முடைய தேவனாகிய கர்த் தருக்கு எவராலும் எதிர்த்து நிற்கக்கூடாது. அவர் சொல்ல ஆகும். அவர் கட்டளையிட நிற்கும். இந்த உன்னதமான தேவனுடைய மறை விலிரு க்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். நாம் அவருடைய வீட்டிற்கு அந்நியரும் பரதேசிகளுமல்ல, நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம். நம்மைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான். உன்னதமானவர் தன் உள்ளங்கைகளில் நம்மை வரைந்திருக்கின்றார். நம்முடைய பாதுகாப்பின் அலங்கங்கள் எப்போதும் அவர்முன் இருக்கிறது. கர்த்தரின் நாமம் பலத்த துருகம்;. மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே பாவமறக் கழுவப்பட்டு நீதிமானாக்கப்பட்டிருக்கும் நமக்கு அங்கே அடைக்கலம் உண்டு. அவரே நம்முடைய மறைவிடமாயிருக்கின்றார். இப்படிப்பட்ட அந்த உன்னதமான தேவனுடைய நாமம் அவருடைய ஜனங்களாகிய நம்மேல் பொறிக்கப்பட்டிருக்கின்றது. பிரியமானவர்களே, நமக்கு கொடுக்கப்பட்ருக்கும் இந்த மேன்மையான அழைப்பை இன்று சற்று சிந்தித்துப் பாருங்கள். சர்வ வல்லமையுள்ளவர் நம்முடைய உறைவிட மும், மறைவிடமுமாகயிக்கும் போது நாம் ஏன் கவலையடைய வேண்டும்? அவர் நம் பக்கத்தில் இருக்கும் போது யார் என்னதான் எமது குடும்பத்திற்கு செய்ய முடியம்?
ஜெபம்:
உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக என்று சொன்ன தேவனேஇ எனக்கு நீர் கொடுத்திருக்கும் மேன்மையான வாக்குத்தத்தங்களை நான் உணர்ந்து கொள்ளும்படிக்கு என் மனக்கண்கனை திறந்துவிடுவீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - யோவான் 14:1-3