புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 31, 2022)

உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்

வெளிப்படுத்தல் 22:11

நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.


இந்த உலகிலே பல மனிதர்கள் அதிகம் பிரயாசப்படாமல், இலகுவா னதும், அநீதியான வழிகளிலும் செழிப்புடன் வாழ்ந்து வருகின் றார்கள். இவர்களை நாம் வாழும் சமுகத்திலும், வேலை செய்யும் இடங்களிலும், கல்வி நிலையங்களிலும், வெளி இடங்களிலும் காண்கின்றோம். இப்ப டிபட்ட சில மனிதர்களை நாம் சில வேளைகளிலே ஆலயங்களில்கூட அவ்வப்போது காணலாம். இதோ, இவர்கள் அநீதியான வழிகளை தெரி ந்து கொண்டாலும், இவர்கள் என் றும் சுகஜீவிகளாயிருந்து, ஆஸ்தி யைப் பெருகப்பண்ணுகிறார்கள். நானோ என் வாழ்நாள் முழுவதும் விருதாவாகவே என் இருதயத்தைச் சுத்தம்பண்ணி, என் கைகளை குற் றங்களுக்கு விலக்கி காத்துவிட்டேன் என்ற எண்ணங்கள் உங்கள் மனதிலே தோன்றலாம். பிரியமானவர்களே, கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது. அதின் வழியாய்ப் பிரவேசிக்கிற வர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது. அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர் என்று நம்முடைய ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். பொல்லாதவர்க ளைக்குறித்து எரிச்சலடையடையாதேயுங்கள். நியாயக்கேடுசெய்கிறவர் கள்மேல் பொறாமைகொள்ளாதேயுங்கள். அவர்கள் புல்லைப்போல் சீக் கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப்போல் வாடிப்போவார்கள். அநேக துன்மார்க்கருக்குள்ள செல்வத்திரட்சியைப்பார்க்கிலும், நீதிமானுக்கு ள்ள கொஞ்சமே நல்லது. துன்மார்க்கருடைய புயங்கள் முறியும்; நீதி மான்களையோ கர்த்தர் தாங்குகிறார். உத்தமர்களின் நாட்களைக் கர் த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக் கும். அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து, பஞ் சகாலத்திலே திருப்தியடைவார்கள். துன்மார்க்கரோ அழிந்துபோவார்கள், கர்த்தருடைய சத்துருக்கள் ஆட்டுக்குட்டிகளின் நிணத்தைப் போல் அவர்கள் புகையாய்ப் புகைந்துபோவார்கள். (சங்கீதம் 37, 73, மத்தேயு 7:13-14). அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமா கட்டும். இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைக ளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது என்று ஆண்டவர் இயேசு கூறியிருக்கின்றார்.

ஜெபம்:

பரலோக பலன்களை தரும் தேவனே, இந்த உலத்தையும், அதின் போக்கில் வாழும் ஜனங்களையும் கண்டு நான் சோர்ந்து போகாதபடிக்கு, உம்முடைய நீதியை எப்போதும் நிறைவேற்றி வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:6-9