தியானம் (ஆடி 30, 2022)
தேவன் உங்கள் கிரியைகளை அறிந்திருக்கிறார்
பிலிப்பியர் 2:16
எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்.
கடந்த சில வருடங்களாக நான் இந்த ஆலயத்திலே அநேக வேலை களை செய்து வருகின்றேன். சூழ்நிலைகள் சாதகமாக இல்லாத நாட்க ளிளும், பல சிரமங்கள் மத்தியிலே, எந்த ஒரு காரியத்திலும் நான் சுய நலம் கருதாது, நீதியுடன் யாவற்றையும் நிறைவேற்றி வருகின்றேன். அந்த மனிதனைப் பாருங்கள். அவன் ஒன்றையுமே தொடக்கூட மாட் டான். ஆனால், தானே எல்லாவற்றை யும் செய்பவனைபோல பாசங்கு செய்து, பலர் முன்னிலையிலே வஞ் சகமாக நற்பெயரை வாங்கிக் கொள்கி ன்றான் என்று ஒரு சகோதரனானவன், தன் போதகரிடம் முறையிட்டான். அத ற்கு அந்த போதகர் மறுமொழியாக: சகோதரனே, நீ பொறுமையுடன் எவ்வ ளவு அதிகமாய் பிரயாசப்படுகின்றாய் என்பதை நான் நன்றாக அறி வேன். அதை ஆண்டவராகிய இயேசுவும் அறிந்திருக்கின்றார். ஆனால் நீ சில காரியங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்பு கின்றேன். 1. ஆண்டராகிய இயேசுவே உனக்கு மனவாஞ்சையையும், செய்கையும், பெலத்தையும் கொடு திருக்கின்றார். அது தேவனுடைய கிருபை. எனவே நீ உனக்கு கட்ட ளையிடப்பட்ட யாவற்றையும் செய்த பின்பு: நான் அப்பிரயோஜனமான ஊழியக்காரன், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தேன்; என்று அறிக்கையிடு. 2. ஒருவரும் கெட் டுப்போகாமல் மனந்திரும்ப வேண்டும் என்று தேவன்தாமே நீடிய பொறுமையுள்ளவராக இருக்கின்றார் எனவே நீ மற்றவர்களின் கிரியை களைக் குறித்து நீ எரிச்சல் உன்னுள்ளத்திலே தங்க இடங் கொடு க்காதே. அது உன் மனச்சாமாதானத்தை கெடுத்து, நீ செய்வதை முறு முறுப்போடும் தர்க்கிப்போடும் செய்யும்படி வழிந டத்தும். மற்றவர்க ளுடைய தவறான நடத்தைகளால், ஆண்டவர் இயேசு உனக்கு தந்த தேவ சமாதானத்;தை நீ இழந்து போகக் கூடாது. 3. தேவன் அவனவ னுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். சோர்ந்து போகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமை யையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பார் என்று அந்த சகோதரனை திடப்படுத்தினார். பிரியமானவர் களே, உங்களைச் சூழ நடக்கும் காரியங்களைக் கண்டுசோர்ந்து போகா திருங்கள். உங்கள் கிரியைகளை தேவன் அறிந்திருக்கின்றார். சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநு பவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலை நிறுத்துவாராக.
ஜெபம்:
நித்திய மகிமைக்கு அழைத்த தேவனே, நான் சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் நாடித் தேடும்படிக்கு என்னை பெலப்படுத்தி நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 1 பேதுரு 5:8-11