புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 29, 2022)

வழி விலகிப்போன இடங்கள்

புலம்பல் 3:40

நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்.


கடந்த சில மாதங்களாக, சில ஞாயிறு ஆராதனைகளில் உன்னை காண முடியவில்லை. உன் வாழ்க்கையில் என்ன நடக்கின்றது என சபையின் போதகர், ஒரு குறிப்பிட்ட சகோதரனிடம் கேட்டார். அதற்கு அவன்: போதகரே, வீட்டிலே பொருளாதார நெருக்கடி மிகவும் மோசமாக இருக்கின்றது. நிரந்தரமான வேலை எதையும் எடுக்க முடியவில்லை. அவ்வப்போது கிடைக்கும் வேலைகளி லும், அதிக சம்பளம் இல்லை. அத னால், மனதிலே குழப்பம், குடும்பத் திலே நிம்மதியில்லை. எனவே வேலை கள் கிடைக்கும் போது, நாளை பார்க் காமல் அதை செய்கின்றேன் என்று கூறினான். அதற்கு போதகர் மறுமொழி யாக: மகனே, உன் சிறு வயதிலிருந்து நான் உன்னை அறிந்திருக்கின்றேன். உன் தந்தையைப்போல நீயும் உண்மையுள்ள பையனாக இருந்தாய். வாலிப நாட்கள் வந்ததும், உன் வழிகளை முற்றாக கர்த்தருக்கு ஒப்புக் கொடுக்காமல், மதுபோதையை விரும்பும் சிலருடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டாய். ஆரம்ப நாட்களிலே, மதுபோதையை நீ கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றாய் என்று நினைத்துக் கொண்டு உல்லாசமாக வாழ்ந்து வந்தாய். ஆனால், அது சிறிது சிறிதாக உன்னை கட்டுப்படுத்தி, இப் போது உன்னை ஆளுகை செய்கின்றது. உன் உழைப்பின் கணிசமான தொகை மதுபானத்திலே செலவாகின்றது. அதனால், நீ கிடைத்த நல்ல வேலைகளை உன்னால் ஒழுங்காக செய்ய முடியவில்லை. மதுபோதை யினால் உன் உண்மையை இழந்து பொய் பேச ஆரம்பித்தாய். அத னால் ஊரிலே இருக்கும் ஜனங்கள் உன் பேச்சை நம்புவதில்லை. நீ வாலிப பிரயாத்திலே உன் வழியை தேவ வசனத்தால் காத்து கொள்ள வில்லை. அதுதான் பிரச்சனையின் வித்து. இன்னு அதன் விளைவை நீ அறுக்கின்றாய். இனியும் காலத்தை விரயப்படுத்தாமல், கர்த்தருக்கு உன்னை முற்றிலும் ஒப்புக்கொடு. நானும் உனக்காக ஜெபம் செய்கி ன்றேன். கர்த்தர் எல்லா அடிமைத்தன கட்டுகளிலுமிருந்து விடுதலை தருவார் என்று அறிவுரை கூறினார். ஆம், சகோதர சகோதரிகளே, உலத்திலே உபத்திரவங்கள் இருந்தாலும், தேவ சமாதானம், தேவனு டைய பிள்ளைகளின் சுதந்திரம். தேவன் கொடுத்த திவ்விய ஆசீர்வா தங்களை வாழ்க்கையிலே காணமுடியவில்லை என்றால், அதை எங்கெ தொலைத்தீர்கள் என்று ஆராய்ந்து பாருங்கள். எந்த இடத்தில் வழி விலகிச் சென்றீர்கள்? தாமதிக்காமல் ஆண்டவர் இயேசுவிடம் திரும் புங்கள். அவர் உங்களுக்கு விடுதலை தந்து நடத்திச் செல்வார்.

ஜெபம்:

தேவனாகிய கர்த்தாவே, என் பெலவீனங்களில் நான் இழுப்புண்டு, நீர் தந்திருக்கும் தேவ சமாதானத்தை இழந்து போகாதபடிக்கு, பிரகாசமுள்ள மனக் கண்களைத் தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 யோவான் 1:9