தியானம் (ஆடி 28, 2022)
நிலையான அஸ்திபாரம்
2 தீமோத்தேயு 2:19
ஆகிலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது;
ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த மனிதனானவன், தன் வீட்டின் பின் வளவிலே பெரிதான ஒரு கோழிக்கூடடை அமைத்து, தன் பிழைப்பு க்காக சிறிய பண்ணையொன்றை நடத்தி வந்தான். சில மாதங்கள் சென்ற பின்பு, கோழிகூட்டின் நிலைகளிலொன்று தளர்நது ஆட்டம் காணுவதை கண்டு கொண்ட அவன், அந்த நிலையை மறுபடியும் உறுதியாக நிறுத்தும்படிக்கு ஊரிலு ள்ள தச்சனொருவனை அழைப்பித் தான். கோழிக்கூட்டையும் அதை சுற் றுப் புறத்தையும் ஆராய்ந்து பார்த்த அந்த தச்சனானவன், அந்த வளவிலே கறையான் புற்றுறெடுத்திருப்பதை (வுநசஅவைநள அழரனௌ) அவதானித்துக் கொண்டான். அந்த வீட்டுக்காரன், சீக்கிரமாக தளர்ந்திருக்கும் நிலையை ஸ்திரப்பத்தி வேலையை முடிக் குமாறு கூறினான். தச்சனானவன் வீட்டுக்காரனை நோக்கி: ஐயா, கூட் டின் நிலையை மறுபடியும் ஸ்திரப்படுத்துவது கடினமானதல்ல, ஆனால், அந்த நிலையானது தளர்ந்து போவதற்கு மூலகாரணியாக இருக்கும் கறையான் புற்றை முற்றாக அகற்றிவிடுவதற்கு நீங்கள் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்படி செய்யாதவிடத்து, உங்க ளுடைய கோழிகூட்டை மட்டுமல்ல, வீட்டின் நிலைகளையும் அவை அரித்துப் போடும்; என்றான். இப்படியாகவே, இந்த உலகமும் அதன் போக்கும் இருக்கின்றது. தங்கள் வாழ்வில் சமாதானத்தை தொலைத்து விட்ட மனிதர்கள், அதன் காரணத்தை அறிந்திருந்தாலும் அவைகளை சீர்செய்து கொள்ள மனதில்லாமல், தற்காலிகமாக எதையும் செய்து தற்போது தாங்கள் விரும்பும் காரியத்தை நடத்தி முடித்தால் போதும் என்று வாழ்கின்றார்கள். வீட்டின் அத்திபாரம் தளர்ந்து போயிருக்க, அதன் சுவர்களை வர்ணணமிட்டு, விலையுயர்ந்த ஜன் னல் கதவுகளை பூட்டி, அழகான கூரைகள் போடுவது போல பலரின் வாழ்க்கையும் ஓடி க்கொண்டிருக்கின்றது. போடப்பட்டிருக்கிற அஸ்தி பாரமாகிய இயேசுகி றிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. பிரியமானவர்களே, தேவனுடைய உறு தியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது. போடப்பட்டிருக்கிற அஸ்திபா ரமாகிய இயேசுகிறி ஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. ஒருவன் இயேசு கிறிஸ்துவில் நிலைத்தி ருந்தால், அந்த வீடு அசைக்கப்படுவதில்லை. புயல்காற்று வீசலாம், பெருமழை அடிக்கலாம். ஆனால் இயேசுவில் நிலைத்திருப்பதால் அந்த வீட்டின் சமாதானத்தை ஒருவனும் பறித்துக் கொள்ள முடியாது.
ஜெபம்:
நற்கனிகளை கொடுக்கும்படி அழைத்த தேவனே, உம்முடைய வார்த்தையின் வெளிச்சத்தில் வாழ்ந்து நீர் விரும்பும் நற்கிரியைகளை நான் என் வாழ்வில் வெளிக்காட்ட என்னை உணர்வுள்ளவனா (ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - மத்தேயு 7:24-27