புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 27, 2022)

இயேசுவின் நாமத்தில் விடுதலை

மாற்கு 9:23

இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.


ஒரு சமயம், தகப்பனானவனொருவன், சிறுவயது முதற்கொண்டு, ஊமை யான ஒரு ஆவி பிடித்த தன் மகனானவனை ஆண்டவர் இயேசுவிடம் கொண்டு வந்தான். அந்த ஆவி அந்தமகனானவனை எங்கே பிடி த்தாலும் அங்கே அவனை அலை க்கழித்து, அவனைக் கொல்லும் படிக்கு அது அநேகந்தரம் தீயி லும் தண்ணீரிலும் தள்ளிக் கொ ண்டு வந்தது. அதைத் துரத்திவி டும்படி உம்முடைய சீஷரிடத்தில் கேட்டேன். அவர்களால் கூடாமற் போயிற்று என்றான். இந்த சம்ப வத்திலே, நாம் பல விடயங்க ளைக் குறித்து தியானம் செய்யலாம் ஆனால் இன்று அந்த தகப்ப னாவருடைய மனவேதனையும், ஆண்டவர் இயேசு அவனுக்கு காட்டின இரக்கத்தையும் குறித்து சற்று தியானம் செய்வோம். அந்த தகப்பனா னவர் ஆண்டவரை இயேசுவை நோக்கி: நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமா னால், எங்கள் மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்று வேண்டிக் கொண்டான். இயேசு தகப்பனை நோக்கி: நீ விசுவா சிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார். சிறு வயது முதல் தன் மகனானவன் படும் கொடிய வேதனையை தன் கண்களால் கண்ட தகப்பனானவனின் மனவேதனை அதிக கொடியதாக இருந்ததால், அவன் இயேசுவை நோக்கி: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்த மிட்டுச் சொன்னான். தன் பிள்ளை படும் பாடுகள் போதும், இனி அவனு க்கு ஒரு நல்ல வாழ்வு வேண்டும் என்ற ஏக்கம் அவனுடைய மனதிலே இருந்தது. அப்பொழுது ஆண்டவர் இயேசு அந்த அசுத்த ஆவியை அதட்டி, அந்த மகனானவனுக்கு விடுதலையையும், தகப்பனானவனுக்கு மன ஆறுதலையும் கொடுத்தார். இன்று உங்கள் பிள்ளைகளுக்கா கவோ, உங்கள் உறவுகளுக்காகவோ மனவேதனையோடு இருக்கும் சகோதர சகோதரிகளே அன்று அந்த தகப்பனானவர், தன் மகனின் விடு தலைக்காக அநேக இடங்களுக்கு சென்று பலரை சந்தித்திருக்கலாம். ஆனால் விடுதலை கிடைக்கவில்லை. ஆண்டவர் இயேசுவிடம் தன் மனவேதனையையும், குறைவையும் அறிக்கையிட்டபோது, அவர் மன மிரங்கி விடுதலையை கட்டளையிட்டார். இன்று நீங்களும் பல வழிக ளில் விடுதலையைத் தேடி களைத்துப் போயிருக்கலாம்உங்கள் மனதி லுள்ளவைகளை ஆண்டவர் இயேசுவிடம் கூறுங்கள். அவரை விசுவ hசியுங்கள், இயேசுவின் நாமத்தினாலே விடுதலை உண்டு என்று அறி க்கை செய்யுங்கள். அவர் உங்களுக்கு நன்மையை அருளுவார்.

ஜெபம்:

இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே, என் வாழ்வின் நிலைமையை நீர் ஒருவரே அறிந்திருக்கின்றீர். உம்மால் ஆகாதகாரியும் ஒன்றுமில்லை. நீர் எனக்கு இளைப்பாறுதலை கட்டளையிடுவீடுவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 11:28