புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 26, 2022)

கர்த்தரால் வரும் ஆசீர்வாதமும் நீதியும்

சங்கீதம் 24:5

அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், தன் இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த மனிதனானொருவன், சுங்க இலாகாவிலே இயக்குனராக பதவியேற்றுக் கொண்டான். இறக்குமதிகளை பரிசோதி த்து, ஆய்வு செய்யும் தணிக்கை அலுவலக விவகாரங்களை (யுரனவை ழுககiஉநச) கவனித்து வந்தான். அங்கு கண்ணியமாக கடயுணர்வுடன் வேலைகளை செய்யும் உழியர்கள் அநேகர் இருந்த போதிலும், சில உத்தியோகத்த ர்கள், அநீதியான முறையிலே வேலை களை நடப்பித்து இலஞ்சம் வாங்கி ஐசுவரியமான வாழ்க்கை வாழ்ந்து வரு வதைக் அவதானித்தான். ஆனால், அவ னுக்கு பெருந்தொகையான பணம் சம் பாதிப்பதற்கு, அநீதியான பக்க வழிகள் இருந்த போதிலும் அவன் தேவனுக்கு பயப்படுகின்ற மனிதனாக இருந்ததால், தன் கைகளை அசுத்தத்திற்கும், இருதய த்தை மாசுபடிவதிலுமிருந்து விலக்கி, தன் ஆத்துமாவை இந்த உலகத் தின் மாயைக்கு ஒப்புக்கொடாமல் காத்து வந்தான். பிரியமானவர்களே, இந்த உலகத்திலே வாழும் நாட்களிலே, நம்முடைய வாழ்விலே நாம் எதையும் செய்வதற்கு அதிகாரமுடையவர்களாக இருக்கின்றோம் ஆனால் அவையெல்லாம் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கைக்கு தகுதியாக வோ, பக்திவிருத்தி உண்டாக்கின்றதாவோ இருக்காது. (1 கொரி 6:12, 1 கொரி 10:23) அதனால், நம்முடைய தகுதிக்கும், வாழ்க்கை முறைக் கும் ஏற்ற வேலைகளை நாம் தேடிக் கொள்ள வேண்டும். அப்படி நாம் தேடிக் கொண்டாலும், அந்த இடத்திலும் அநீதியை நடப் பிக்கின்ற மனிதர்கள் இருப்பார்கள். இந்த உலகத்தில் வாழும்வரை நாம் இதை தவிர்த்துக் கொள்ள முடியாது. ஏனெனில், ஆண்டவராகிய இயேசு கூறிய போது, நாற்றுக்களோடு, களைகள் விதைக்கப்பட்டிரு ப்பது போல, தேவனுடைய பிள்ளைகள் கூடிவரும் இடத்திலும், அவிசு வாசிகள் சிலர் சேர்ந்து கொள்கின்றார்கள். எனவே அந்தக் காரணத் திற்காக, நாம் நம்முடைய வேலையையோ, சபையை யோ வேண்டாம் என்று தள்ளிவிடுவதற்கு தீர்மானம் செய்யக் கூடாது. சுங்க இலாகா விலே, நீதியாக தன் வேலையை கவனித்து வந்த அந்த அதிகாரியைப் போல, நாம் தேவ நீதியை நிறைவேற்றுகின்றவர்களாக, பலர் முன்னி லையிலே நல்ல அறிக்கை செய்து, சாட்சியுள்ள வாழ்க்கை வாழ வேண்டும். சுத்தமான கைகளையும், தூய்மையான இருதயத்தை யமு டையவன், தன் ஆத்துமாவை பாதாளக் கட்டுகளுக்கு காத்து, கர்த்த ரால் ஆசீர்வாதத்தையும், நீதியையும் பெறுவான்.

ஜெபம்:

நீதியின் தேவனே, நான் அநீதத்தின் கூலியைவிரும்பி, அக்கிரமத்தின் கட்டிலே அழிந்து போகாமல், தேவ நீதியில் பிரியமாயிருந்து, உம் முடைய வார்த்தையின் வெளிச்சத்தில் வாழ வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - நீதிமொழிகள் 11:1