புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 25, 2022)

உள்ளந்தரியங்களை தேவன் அறிவார்

1 பேதுரு 2:16

சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும் உங்கள் சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாகக் கொண்டிராமல், தேவனுக்கு அடிமைகளாயிருங்கள்.


சகோதரனே, நீ தேவனுடைய பிள்ளையாயிருக்க, எப்படி மனிதர்களை பாவத்திற்கு வழிநடத்தும் களியாட்டங்களும், துன்மார்க்கமும் நிறைந்த மதுபான சாலையிக்கு வேலை செய்ய உடன்பட்டாய் என்று ஒரு தேவ ஊழியர், ஒரு மனிதனானவனிடம் கேட்டார். அதற்கு அவன்: ஐயா போத கரே, தானியேல் என்னும் தேவனுடைய தாசன், அந்நிய தேசத்தின் அர ண்மனையிலே, களியாட்டங்கள் நிறைந்த இடத்திலே வாழ்ந்து வந்த போதும், அங்கு ள்ள களியாட்டங் களால் தன்னை கறைப்படுத்திக் கொள்ளாது வாழ்ந்து வந்தான். அது போலவே நானும் இந்த களியாட்ட விடுதியில் வேலை செய்தாலும், துர்மார்க்க கிரியை களுக்கு உடன் பட மாட்டேன் என்றான். அதற்கு போதகர் மறுமொழியாக: சகோதரனே, தேவனுடைய தாசனாகிய தானி யேல், தேவ சித்தம் நிறைவேறும்படிக்கு, பிரத்தியேகமாக தேவனாலே தெரிந்து கொள்ளப்பட்ட பாத்திரம். அவன் தன்னு டைய சொந்த தீர்மா னத்தின்படி அந்நிய தேசத்திற்கு அடிமையாக கொண்டு போகப்படவி ல்லை. ஆனால் அவன் அந்நிய தேசத்திற்கு கொண்டு போகப்பட்ட போது, தனக்குகிடைத்த முதலாவது சந்தர்ப்த்திலேயே தான் தேவனு டைய ஊழியன் என்பதை வெளிப்படுத்தி, தன்னை தான் தீட்டு ப்படுத்த மாட்டேன் என்று அதிகாரிகளுக்கு கூறினான். நீயோ, அந்த இட த்திலே நடக்கும் அலங்கோலங்களை அறிந்திருந்தும், உன் சுய இஷ;டப்படி, அங்கே வேலை செய்வதற்கு தீர்மானம் செய்து கொண் டாய். தூனி யேலைப் போல, உனக்கு கிடைத்த முதல் சந்தர்ப்பத்திலே, நீ யார் என்பதையும் அந்த இடத்தில் நடக்கும் காரியங்களை நீ ஏற்றுக் கொள் வதில்லை என்பதையும், உன் அதிகாரிகளிடம் கூறினாயா? அங்கே வருகின்ற வாடிக்கையாளர்களுக்கு, நீ என்ன கூறுவாய்? இது உன்னு டைய வாழ்க்கை, தேவன் உனக்கு அருமையான இரட்சிப்பை தந்தி ருக்கின்றார். எனவே நீயே நல்ல தீர்மானத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். பிரியமானவர்களே, இன்று சிலர் தேவன் தங்க ளுக்கு கொடுத்த சுயாதீனத்தை தங்கள் மனதிலே இருக்கும் துன்மார் க்க கிரியைகளை நிறைவேற்றும்படிக்கு மூடலாக பயன்படுத்த்துகின் றார்கள். நீங்களோ, உங்கள் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலை யும் உறுதிபடுத்திக் கொண்டு, தேவன் உங்களுக்கு கொடுததிருக்கின்ற பிரகாசமுள்ள மனக்கண்கள் இருளடைந்து போகாதபடிக்கு பரிசுத்த வாழ்வை காத்துக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

பரலோக தேவனே, உம் வார்த்தையை கேட்கக்கூடாதபடிக்கு என்னுடைய இருதயம் இருளடைந்து போகாதபடிக்கு என் நடைகளை நீர் ஸ்திரப்படுத்தி, உம் வார்த்தையின் வழியிலே நான் வாழ கிருபை செய்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 139:1-3