தியானம் (ஆடி 24, 2022)
நிறைவான மனிதர்கள் எங்கே?
2 பேதுரு 1:3
ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி,
இந்த உலகத்திலே நாம் வாழும் நாட்களிலே, பிரச்சனைகள் எதுவும் இல்லாத ஒரு நாட்டிலே, தவறுகள் ஒன்றும் நடக்காத ஒரு சமுகத்திலே, நிறைவான பரிசுத்த வாழ்வு வாழும் ஜனங்களுடன் வாழக்கூடிய சூழ் நிலை இருக்கும் இடத்தை நாம் கண்டுபிடிக்க கூடுமானால் அது எவ்வ ளவு நன்மையாக இருக்கும்? சில மனிதர்களோ, தாங்கள் நிறைவுள் ளவர்கள் என்றும், மற்றவர்கள் யாவ ரும் குறைவுள்ளவர்கள் என்றும் கருதி, நிறைவான சூழ்நிலையுள்ள நாட்டை, சமுகத்தை, இடத்தை கண்டு பிடிக்க வேண்டும் என்று தங்கள் வாழ்நாள் முழுவதையும் விரயப்படுத்துகின்றார் கள். ஆனால் அப்படியான நாடோ, சமுகமோ, வீடோ இந்த உலகத்திலே இல்லவே. நாம் அப்படிப்பட்ட அதிசய மான ஒளிமய நாடாகிய பரம தேசத்தையே நாடி வாழ்ந்து கொண் டிரு க்கின்றோம். நோவா என்ற மனிதன் வாழ்ந்த நாட்களிலே, அன்றைய உலகத்திலே, மனுஷர்களுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவர்களுடைய இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, தாம் பூமியிலே மனு ஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. மனிதர்களுடைய அக்கிரமம் மிகவும் கொடியதாக இருந்ததால், மனுஷர்களை பூமியின்மேல் வைக்காமல், மனுஷர்கள் முதற்கொண்டு, சகல உயிரினங்களையும் நிக்கிரகம் பண் ணும்படி தேவனாகிய கர்த்தர் தீர்மானம் செய்தார். ஆனால், நோவா விற்கும் அவனுடைய குடும்பத்தினருக்குமோவென்றால் கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. அந்த அக்கிரமம் மிகுதியான உலகிலே, பொல்லாத மனுஷர்கள் மத்தியிலே நோவா வாழ்ந்த போதும், துஷ;ட மனிதர்களுடைய கிரிகைளுக்கு அந்நியனாகவும்;, தேவனுக்கு பிரிய மானவனுமாக வாழ்ந்து வந்தான். கடைசி காலமாகிய இன்றை உலகி லும் நோவாவின் நாட்களிலே வாழ்ந்தது போல மனிதர்கள் இருப்பா ர்கள் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. எனினும், கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்க ளும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு தேவை யான யாவற்றையும் தேவன் நமக்கு கொடுத்திருக்கின்றார். எனவே நிறைவான நாட்டை, சமுகத்தை, ஜனங்களை தேடி அலையாமல், நீங் கள் கிறிஸ்துவுக்குள்ளே நிறைவான வாழ்க்கையை வாழுங்கள்.
ஜெபம்:
பரிசுத்த வாழ்வு வாழ அழைத்த தேவனே, இச்சையான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு உம்முடைய அருமையான வாக்குத்தத்தங்களை பற்றிக் கொண்டு வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 2 பேதுரு 1:1-8