புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 23, 2022)

என் கொள்கையா? தேவ கிருபையா?

பிலிப்பியர் 2:7

தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.


'அந்த மனுஷனானவன் கொள்கையின்படி வாழும் உத்தமன், சொல் லுகின்ற காரியங்களை செய்கின்றவன்' என்று குறிப்பிட்ட சமுகத்திலே வாழ்ந்து வந்த மனிதனைக் குறித்து ஜனங்கள் சாட்சி கொடுத்தார்கள். அவனுடைய மகன் கல்வி கற்கும் பாடசாலையிலே ஒன்றின்பின் ஒன் றாக சில பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தது. அதைக் குறித்து பாட சாலை அதிபரோடு சில தடவைகள் பேசி னான். அதிபர் மறுமொழியாக: இந்த பாடசாலையிலே ஆயிரத்திற்கு அதி கமான பிள்ளைகளும், ஏறத்தாழ நூறு நிர்வாகிகளும், ஆசியர்கள் இருக்கின்றார்கள். நாம் கல்வி திணைக்களத்தின் ஒழுங்கு முறைகளுக்கும், நாட்டின் சட்டதிட்டங்களுக் கும் கட்டுப்பட்டிருக்கின்றோம். பிரச்சனைகள் உண்டு ஆனால் அவை களை ஒரு இராத்திரியிலே மாற்றிவிட முடியாது எனவே சற்று பொறுமை யாக இருங்கள் என்று தயவாக கேட்டுக் கொண்டார். ஆனால் அந்த மனி தனோ: இந்த பாடசாலை என் மகனுக்குரியதல்ல என்று அவனை வேறு பாடசாலைக்கு மாற்றிவிட்டான். அதுபோலவே, அவன் வாழும் சமூக த்திலே பிரச்சனைகள் வந்த போது, வீட்டை விற்றுவிட்டு வேறு இடத்தி ற்கு சென்றான். இப்படியாக, சில தடவைகள் பிரச்சனைகளைக் குறித்து பேசிய பின்பு, மாற்றங்கள் வராதவிடத்து, அவன் பொருட்களை வாங் கும் கடைகளையும்;, வேலை செய்யும் இடங்களையும், தன் நண்பர்கள், உறவினரகளையும் விட்டு அகன்று போய்விடுவான். அதேவிதமாக அவன் செல்லும் ஆலயத்திலும் நடந்து கொண்டான். ஆனால், சமுகத்திலுள்ள மனிதர்கள் சாட்சி கொடுத்தது போல, அவன் நன்நடக்கையுள்ள வாழ் க்கை வாழ்ந்து வந்தான். அவனுடைய முறைப்பாடுகள் ஏறத்தாழ யாவும் உண்மையானவைகளாக இருந்து வந்தது. ஆனால் அவன் கொள்கை வாதியாக இருந்து, அதற்கு அவன் அடிமையாக மாறிவிட்டான். ஒரு நாள், அவன் சொந்த குடும்பத்திலே சில பிரச்சனைகள் ஒன்றின்பின் ஒன் றாக வர ஆரம்பித்தது. அதைக் குறித்து அவன் முன்பு மனைவி பிள் ளைகளோடு பேசியிருந்தான். இப்போது அவன் என்ன செய்வான்? பிரி யமானவர்களே, ஆண்டவராகிய இயேசுதாமே, கோணலும் மாறுபாடான இந்த உலத்தை இரட்சிக்கும்படிக்கு தம்மைத் தாழ்த்தி பரலோகத்திலிரு ந்து பாவிகளை தேடி வந்தார். எனக்காக மட்டுமல்ல, பாவத்திலே மூழ் கியிருக்கும் உலகத்திற்காகவும் தம்மை ஒப்புக்கொடுத்திருக்கின்றார். என்னுடைய கொள்கைகள் அல்ல இரட்சிப்பானது தேவ கிருபையி னாலே உண்டாகின்றது. அந்த கிருபையை மற்றவர்களுக்கு காண்பியுங் கள். பூமிக்கு உப்பாகவும், உலகத்திற்கு வெளிச்சமாகவும் வாழுங்கள்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, இருளில் கிடக்கும் இந்த உலகம் முழு வதும் பாவத்தில் அழிந்து போகாதபடிக்கு, பரலோத்தைவிட்டு இந்த பூவுலகிற்கு திருக்குமாரனாகிய இயேசுவை தந்ததிற்காக நன்றி. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 3:16