புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 22, 2022)

மன வாஞ்சைகளை நிறைவேற்றுவார்

எபேசியர் 3:16

நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும்,


பத்து வருடங்களுக்கு முன்பாக நான் இருந்த நிலைமையை திரும்பிப் பார்க்கும் போது, அன்று நான் என் வாழ்க்கையில் சரி என்று நினைத்த காரியங்கள் இன்று தவறாகத் தெரிகின்றது. எனக்குள்ளே கிரியை செய்யும் தேவ ஆவியானவர், என் சிந்தையை தேவனுக்கென்று மாற்றி புதுப்பித்திருக்கின்றார். இன்னும், நான் மாற வேண்டிய காரியங்களை எனக்கு உணர்த்தி, அவைகளிலும் நான் வெற்றி பெற எனக்கு பெலன் தருவார் என்று ஒரு மனிதனானவன், தன் போதகரிடம் கூறிக் கொண்டான். பிரியமானவர்களே, தேவனே தம்மு டைய தயவுள்ள சித்தத்தின்படி விரு ப்பத்தையும் செய்கையையும் நம்மில் உண்டாக்குகிறவராயிருக்கிறார். இந்த உள்ளான மனிதன் என்னும் சஞ்சிகையை எழுதும் போது, அதை அநே கர் வாசித்து பயன்பெற்று ஆன்மீக வளர்ச்சியடைய வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாக இருக்கின்ற போதிலும், முதலாவதாக, என்னு டைய உள்ளான மனிதன் நாளுக்கு நாள் கிறிஸ்துவுக்குள் புதிதாக்க ப்பட வேண்டும் என்பதே என்னுடைய வாஞ்சையாக இருக்க வேண்டும். எனக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்க வேண்டும். பிள்ளைகள் படித்து பட்டம் பெற வேண்டும். பிள்ளைகளுக்கு நல்ல திருமண சம்ப ந்தம் கிடைக்க வேண்டும். வீடு வாங்க வேண்டும். கார் வாங்க வேண்டும் என்ற வேண்டுதலின் நீண்ட பட்டியல் மனிதர்களிடம் உண்டு. அவைகள் தவறான வேண்டுதல்கள் அல்ல. ஆனால், நம்முடைய வாழ் க்கையிலே முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அதன் நீதியையும் தேடுவதே நாள்தோறும் நம்முடைய வாஞ்சையாக இருக்க வேண்டும். மிகுதியா னவற்றை தேவன்தாமே பார்த்துக் கொள்வார் என்று வாக்குரைத்திரு க்கின்றார். தேவன் விரும்பும் ஆன்மீக மாற்றங்களை மனித பெலத்தி னால் நிறைவேற்ற முடியாது. ஆனால், நீங்கள் வாஞ்சித்தால், தேவ னால் கூடாதது ஒன்றுமில்லை. பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணராகிய, நம்முடைய கர்த்தராயிரு க்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு, நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமை யாய்ப் பலப்படவும், விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங் களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்ற வர்களாகி, அறிவுக்கெட்டாத தேவனின் அன்பு நிலைத்திருக்கவும் வேண்டுதல் செய்யுங்கள்.

ஜெபம்:

நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் அதிகமாய் கிரியை செய்யும் தேவனே, நான் உம்முடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப் படும்படிக்கு, உம்முடைய மிகுந்த கிருபையின்படியே, எனக்கு அநுக்கிரகம் செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 1:5