புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 21, 2022)

மாளியையாக கட்டுப்பட்டு வருகின்றீர்கள்

1 கொரிந்தியர் 3:16

நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?


ஒரு ஊரிலே வசித்து வந்த செல்வந்தனொருவன், அழகான வீட்டை கட்டி, யாவரினதும் கண்களைக் கவரும் பூந்தோட்டத்தை நட்டு, அந்நி யர்கள் உள்ளே வராதபடிக்கு உயர்ந்த சுற்ற மதிலைக் கட்டி, இரண்டு நாய்களை வாங்கி, தெழில்நுட்ப வீடியோ கருவிகளை இணைத்து, காவலுக்கு ஒரு மனிதனையும் வைத்திருந்தான். இவ்வளவு அருமை யான வீட்டைக் கட்டி, கள்வர்கள் உள்ளே நுழைய முடியாதபடிக்கு பெரும் பாதுகாப்புகளை செய்த அந்த செல்வந்தனானவன், வீட்டின் உட்புறத்தின், அடித்தளத்திலுள்ள திறந்த வெளியான்றிலே, ஒரு கரடி குட்டியையொன்றை, கூட்டிற்குள் வைத்து வளர்த்து வந்தான். அது குட்டியாக இருந்ததால், கூட்டிற் குள் அவனுடைய கட்டிற்பாட்டிற்குள் அடங்கியிருந்தது. இந்த கதையை வாசிக்கும் போது, யாதார்த்மற்றதும், மதியீனமானதும், நகைப்புக்குரிய துமாக இருக்கின்றதல்லவா? ஆனால், இப்படிப்பட்ட உண்மைச் சம்ப வங்களை மேற்கத்தைய நாடுகளிலே அவ்வப்போது செய்திகள் வாயி லாக அறிவிக்கப்படுவதை கேட்கலாம். அந்த செல்வந்தனானவன் கட் டிய வீட்டிற்கு ஒப்பனையாக, நீங்களும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் மூலைக்கல்லின்மேல், ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக் கேற்ற மாளிகையாகவும், அவர் மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக் கூட்ட மாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள். மாளிகை முழுவதும் இசைவாய் இணை க்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது. ஆனால், அந்த மாளிகைக்குள் ஒருவன் கரடி குட்டியை வைத்திருப்பது போல, மாம்சத்திற்குரிய மோசம் போக்கும் கிரியைகளை ஒருவன் தன் சிந்தை யிலே ஒழித்து வைத்திருப்பானானால், அவனை குறித்து நீங்கள் என்ன சொல்வீர்கள்? மதியீனனான அந்த செல்வந்தன், ஒரு நாள் அழி ந்து போகின்ற அந்த வீட்டிற்குள் பொல்லாத கரடியை வளர்ந்து வந் தான். ஆனால், அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற் கேது வாக கட்டப்பட்டுவரும் ஆலயமாகிய தனக்குள்ளே, அழிவுக்கு வழி நடத்தும் பொல்லாத கிரியையை அடக்கி வைத்தால் அது அந்த செல் வந்தன் செய்ததைவிட பரிதவிக்கக்கூடடிய காரியமாக இருக்குமல் லவா? எனவே முதலாவதாக உங்கள் சிந்தையை கர்த்தருக்குள் காத் துக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

சுகம் தரும் தேவனே, ஆண்டுகள் கடந்து சென்றாலும் நான் உம் மேல் கொண்டுள்ள விசுவாசத்திலே தளர்ந்து போய்விடாதபடிக்கு என் குறைவுகளிலே நீரே நிறைவாக இருந்து என்னை வழிடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:19