புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 20, 2022)

மனம் மறுரூபமாகட்டும்

ரோமர் 12:2

உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.


ஒரு ஐசுவரியமுள்ள மனிதனாவனொருவன், சிறுத்தையின் இனத்தை சேர்ந்த காட்டுப் பூனையொன்றை செல்லப் பிராணியாக வளர்ந்து வந் தான். அதற்கு பல பயிற்சிகளை கொடுத்து, அது குட்டியாக இருக் போதே மனிதர்களோடு சஞ்சரிக்கும்படி செய்து, அதன் சுபாவத்தை மாற்ற பல முன்னேற்பாடுகளை செய்து வந்தான். சில ஆண்டுகளுக்கு பின் அது வளர்ந்து பெரிய மிருகமாக காட்சியளித்தது. அவனோடு, அவன் பிள்ளைகளோடும் அது பட்சமாக பழ கிக் கொண்டது. ஒருநாள் இதை பராமரிக்கும் வேலைக்காரன், குறித்த நேரத்திற்கு மதிய வேளைக்குரிய தீனியை போடுவதற்கு மறந்து போனான். மாலையிலே பிள்ளைகள் அதனோடு விளையாடும்படி கூட் டை திறந்து போது, அது பாய்ந்து பிள்ளைகளில் ஒருவனின் கையை கடித்துப் போட்டது. மனிதர்களுடைய இரத்தத்தின் சுவையை அது அறிந்து கொண்டதால், அதை இனிவீட்டிலே வைக்க முடியாது என்று, நாட்டிலுள்ள மிருக காட்சிசாலைக்கு அதை அன்பளிப்பாக கொடுத்துவி ட்டார்கள். பிரியமானவர்களே, ஒரு மனிதனுடைய வாழ்க்கையிலே, அவன் தன் வாழ்க்கையை ஒழுங்கு படுத்தும்படிக்கு, அவன் எடுக்கும் வெளி மாற்றங்கள் தேவையானதும், நன்மையானதுமாக இருக்கின்றது. ஆனால், அவை மட்டும் போதாது. உள்ளான மனிதன் மாற் றப்பட வேண்டும். முதலாவதாக, ஒரு தவறான பழக்கத்தை விட்டு விடுகின் றேன் என்ற உள்ளான மாற்றமும் தீர்மானமும் உண்டாக வேண் டும். பின்பு, அந்த தவறான பழக்கத்தை தூண்டும் அல்லது ஊக்கு விக்கும் அல்லது விளம்பரப்படுத்தும் வெளியான காரியங்களை நம்மை விட்டு நாம் அகற்றவிட வேண்டும். அந்த காட்டுப் பூனையைக் போல, மிருக சுபாவத்தை உள்ளே வைத்துக் கொண்டு, வெளியே வளர்ந்து வரலாம். மனிதர்கள் அதைக் கண்டு மெச்சிக் கொள்ளலாம். அந்த வெளியான வளர்ச்சியோடு, அதன் உள்ளே மறைந்திருக்கும் தீய சுபாவமும் பெலன் கொண்டு கெடிதுள்ளதாக வளர்ந்து வருகின்றதாக இருக்கும். அப்படி யானால், இனி வெளி மாற்றங்களில் பிரயோஜனம் இல்லை, எனவே அவைகளை விட்டுவிடுவோம் என்று கூறலாமா? இல்லை, நல்ல பழக்க ங்களை விட்டுவிடாமல், இறுகப் பற்றிக் கொண்டு, தேவனுடைய நன் மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியும்ப டிக்கு, தேவனே, நான் உம்முடைய சித்தத்தை என் வாழ்விலே நிறைவேற்ற விரும்புகின்றேன் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். மேன்மையான உள்ளான மாற்றங்களை அவர் உங்களில் உண்டு பண்ணுவார்

ஜெபம்:

தேவ சாயலாகும்படி என்னை வேறு பிரித்த தேவனே, நான் அனுதினமும் உம்மிலே நிலைத்திருந்து, உள்ளான மனிதன் உம்மிலே பெலன் கொள்ளும்படிக்கு,நன்மையான மாற்றங்களை உண்டு பண்ணுவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 12:17