புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 19, 2022)

உகந்த பாத்திரங்கள்

2 தீமோத்தேயு 2:21

தன்னைச் சுத்திகரித்துக் கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்.


ஒரு தாயானவள், மதிய உணவிற்காக விருந்தாளிகள் வீட்டிற்கு வரவி ருப்பதால், போஜன பாத்திரங்களை வழமையாக சுத்திகரிப்பு செய்வதைவிட இன்னும் அதிகமாக சுத்தமாக்கினாள். அவள் பாத்திரங்களை கழுவி சுத்தமாக்கும் போது, உட்புறத்தை நன்றாக கழுவி, பின்பு அது போல வெளிப்புறத்தையும் சுத்தமாக்கினாள். சில பாத்திரங்கள் நீண்ட நாட்களாய் பாவனையில் இருந்ததால், அதன் வெளிப்புறம் கவர்ச்சியாக இருக்கவில்லை. ஆனால், வெளிபுறம் சுத் தமாகவும், உட்புறமோ அதிசுத்தமாக வும் காணப்பட்டது. பிரியமானவர்களே, நாம் ஒவ்வொருவரும் தேவனாலே தெரிந்து கொள்ளப்பட்ட பாத்திரங்களாக இருக்கின்றோம். ஒரு எஜமானானவன், தன்னுடைய வீட்டிலே அநேக பாத்திரங்களை வௌ;வேறு உபயோகங்களுக்காக வைத்திருப்பான். அவையாவும் அவனுக்கு தேவையான பாத்திரங்கள். சில வேளைகளிலே, சில பாத்திரங்கள் வெளி தோற்றத்தில் காலம் கடந்ததாகவும், உலக பார்வைக்கு கவர்சியற்றதாகவும் காணப்படலாம். இந்த உலகத்திலுள்ள எஜமான ன்கள் ஒருவேளை வெளியாக காணப்படும் கவர்ச்சியை நோக்கி பார்க்கலாம். ஆனால் நம்முடைய எஜமானனாகிய இயேசு அப்படியாக பார்பவரல்லர். உடைந்த பாத்திரம் என்று தன்னிடத்தில் வரும் எந்த மனிதனையும் தள் ளிவிடுபவர் அல்ல. அவர் தள்ளுண்டுபோன பாத்திரங்களை எடுத்து, தம் முடைய மகிமையினாலே நிறைக்கின்றவராகவே இருக்கின்றார். ஆனா லும் அவர், பாத்திரங்களை குறித்து அருவருக்கின்ற காரியம் ஒன்று உண்டு. அவர் இந்த உலகத்திலே இருக்கும் நாட்களிலே, அன்றிருந்த மதத்தலைவர்களையும், சிறப்பு குடிமக்களாக இருந்தவர்களையும் நோக்கி: மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜ னபானபாத்திரங்களின் வெளிப்புறத் தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத் திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திரு க்கிறது. குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின் வெளிப் புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு என்றார். ஆம், வெளிபுற மாற்றங்களும் தேவவையானது ஆனால், முத லாவதாக, நம் எஜமானனாகிய இயேசுவுக்கு நாம் உகந்த பாத்திரமாக இருக்கும்படி, நம் உள்ளத்தை நாம் சுத்தகரித்துக் கொள்ள வேண்டும்.

ஜெபம்:

அன்பின் பரம தந்தையே, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன் பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடித் தேட கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 கொரி 6:5-11

Category Tags: