புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 18, 2022)

ஜெபத்தை கேட்கும் பரம பிதா

மத்தேயு 7:7

கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்;


தூரத்திலுள்ள கிராமமொன்றிற்கு சென்று விடுமுறை நாட்களை கழி த்துவிட்டு, வீடு திரும்பிய குடும்பத்தினர், வீட்டிற்குள் துர்நாற்றும் வீசு வதை நுகர்ந்த போது, ஜன்னல்களை திறந்து, வெளிக்காற்று உள்ளே வருவதற்கு விட்டுவிட்டார்கள். அடுத்த சில நாட்களிலும், நறுமணம் வீசும் வாசணை திரவியங்களை வீட்டிற்குள் வைத்து, வீட்டின் நிலத்தை கழுவி, சுவர்களை துடைத்து பல முயற்சிகள் செய்த போதும், அந்த நாற்றமா னது வீசிக் கொண்டே இருந்தது. அது எங்கிருந்து வருகின்றது என்று தேடிப் பார்த்த போது, வீட்டின் பின்புறத்தின் சிறு துவாரம் வழியாக எலிகள் போக் குவரத்துமாக இருப்பதை கண்டு கொ ண்டார்கள். உடனடினயாக, எலிகளை வீட்டைவிட்டு அகற்றுவதற்கும், அந்த துவாரத்தை அடைப்பதற்கு நடவ டிக்கைகளை செய்து முடித்து, அந்த துர்நாற்றத்தையும், அதை உண்டு பண்ணும் காரணியையும் வீட்டைவிட்டு அகற்றினார்கள். பிரியமானவர் களே, மனிதர்களுடைய சுபாவங்களும் இப்டியாக அவர்களுக்குள்ளே அடங்கியிருக்கின்றது. சில சுபாவங்கள், வாசம் வீசும் நறுமணமுள்ள அழகான மலர்களைப் போல அவர்கள் செல்லும் இடமெங்கும் வீசும். ஆனால், சில நாற்றமெடுக்கும் நாட்பட்ட உணவுப்பண்டங்களைப் போல உள்ளே அடக்கப்பட்டிருக்கும். சிலருடைய தூய்மையற்ற வாழ்க்கையா னது, அவர்களுடைய சாதுரியத்தினாலே, மனதிலே மறைக்கப்பட்டு, காக்கப்பட்டு வருகின்றது. அது எவ்வளவு காலமாய் மறைந்திருக்கின் றோ, அவ்வளவு அகோரமான கிரியைகளை நடப்பித்து வரும். எனவே, அவைகளை உண்டு பண்ணுகின்ற மூலகாரணியை உங்களை விட்டு அகற்றிப் போடுங்கள். ஆகையால், கசப்பு, வைராக்கியம், பகை, வன் மம், பெருமை, விபச்சாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகா ராதனையான பொருளாசை ஆகிய இவைகள் உங்களுக்குள் மறைந்தி ருக்காதபடி எச்சரிக்கையாயிருங்கள். இவைகளின்பொருட்டே கீழ்ப்படி யாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும். இந்த உல கிலே நமக்கு உண்டாகும் அநேக தேவைகளுக்காக நாம் ஊக்கத் தோடு ஜெபிக்கின்றோம். சில வேளைகளிலே, அவைகளை பெற்றுக் கொள்ளும்வரை பிரதிஷ;டைகளோடு, நண்பர்கள், உறவினர், உடன் சகோதரர்கள், தேவ ஊழிகர்கள் பலரிடம் கூறி இடைவிடாமல் வேண்டு தல் செய்து அவைகளை பெற்றுக் கொள்கின்றோம். அப்படியானால், நம் ஆன்மீக தேவைகளை குறித்து நாம் ஊக்கத்தோடு ஜெபம் செய்யும் போது பரம பிதா அவைகளை அருளுவது அதிக நிச்சயம் அல்லவா?

ஜெபம்:

என் கிருபை உனக்கு போதும் என்று சொன்ன தேவனேஇ உமக்கு மறைவானது ஒன்றுமில்லை. எனக்குள்ளே மறைந்திருக்கும் ஆகாத சுபா வங்கைள நான் விட்டுவிடும்படிக்கு எனக்கு பெலன் தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ஏசாயா 43:11-19