தியானம் (ஆடி 17, 2022)
மறைந்திருப்பவைகள் வெளியாகும்
சங்கீதம் 139:24
வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்துஇ நித்திய வழியிலே என்னை நடத்தும்.
வாலிபப் பருவத்தை அடைந்த மகனானவன், மாலை நேரங்களிலே அவ்வப்போது வீட்டிற்கு பிந்தி வர ஆரம்பித்ததை கண்டு கொண்ட பெற் றோர், அவனை அழைத்து, மகனே, தகுந்த காரணங்கள் இல்லாமல் நீ வீட்டிற்கு பிந்தி வர முடியாது. குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு முன்பு நீ எப்படியாவது, வீட்டிற்கு கண்டிப்பாகத் திரும்ப வேண்டும் என்று திட் டமாக கூறினார்கள். அந்த வாலிபனு க்கோ பெற்றோரின் அறிவுரையை ஏற் றுக் கொள்ள மனதில்லை ஆனால் வேறு வழியில்லாதபடியால் அவன் கீழ் படிய வேண்டிய நிர்ப்பந்தம் அவனுக்கு இரு ந்தது. சில ஆண்டுகளுக்கு பின், அவன் தன் உயர் கல்வியை முடித்து, வேலை யொன்றை எடுத்துக் கொண்டான். அத னால் அவனுடைய தனிப்பட்ட பொரு ளாதரா நிலைமை செழிப்படைந்தது. அதனால் அவனுக்கு இப்போது சுயாதீனம் உண்டாயிற்று. அவன் இராச்சாமங்களிலே வீடு திரும்பும் போது, பெற்றோர் அவனை கடிந்து கொள்ளும் போது, 'நான் வீட்டைவிட்டு நண்பர்களோடு எங்கேயாவது போய்விடுவேன்' என்று மிரட்டுதல் விட ஆரம்பித்தான். இப்போது பெற்றோருக்கு பிள்ளைப் பாசமும், குடும்ப கௌரவமும் அழுத்தமாக இருந்ததால், அவர்கள் அவனை அவன் பாட்டிற்கே விட்டுவிட்டார்கள். அந்த வாலிபனானவன், கையிலே பணம் புளக்கம் ஏற்பட்டதாலும், நாட்டின் சட்டப்படி வயதெ ல்லையை தாண்டியதாலும் அவன் இப்போது துணிகரம் கொண்டான். அது இப்போது உருவானதில்லை, அது சிறு பிராயத்திலிந்தே அவனு ள்ளே இருந்தது, ஆனால் வேறு வழியில்லாதபடியால் அவன் கீழ்படிப வனைப் போல தன்னை காண்பித்துக் கொண்டான். பிரியமானவர்களே, வாலிபர்களுடைய வாழ்க்கையில் மாத்திரமல்ல, சில பெரியவர்கள், வயதானோர்களின் வாழ்க்கையிலும், பொருளாதர வளர்ச்சி உண்டாகும் போது, குடும்பங்களில், சபைகளிலும், வெளியிடங்களிலும் அவர்களுக் குள் மறைந்திருந்த உண்மையான சுபாவங்களை வெளியே காண்பிக்கி ன்றார்கள். கெட்டகுமாரன் உவமையில் கூட, இளைய குமாரனுக்கு தன் ஆஸ்திகளின் பங்கை பெற்ற போது, தந்தையின் வீட்டைவிட்டு அவன் தன்னுடைய விருப்பங்களை நிறைவேற்றக் கூடிய இடத்தையும், நட்பு க்களையும் தேடி, தூரதேசத்திற்கு சென்றான். தேவனுடைய ஆவிக்கு மறைவாக நாம் எங்கும் செல்ல முடியாது. எனவே வேதனையுண்டாக் கும் வழிகள் நமக்குள்ளே மறைந்திருந்தால், அவை அதன் கிரியையை நடப்பிக்க முன்பு கர்த்தரிடத்தில் அறிக்கையிட்டு விட்டுவிடுவோமாக.
ஜெபம்:
அவனவன் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கு ம்படிக்குஇ இருதயத்தை ஆராய்கிற தேவனேஇ என் மனம் உமக்கு ஏற்புடை யதாக இருக்கும்படிஇ என்னை சுத்திகரித்து காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - எரேமியா 17:10