புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 16, 2022)

போதனைகளுக்கு கீழ்படியுங்கள்

1 பேதுரு 5:5

பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.


சில வேளைகளிலே நாம் வைத்தியரை சந்திக்கும் போது, அவரோ நாம் விரும்பாத கசப்பான சில உண்மைகளை வெளிப்படுத்துவண்டு. எடுத்துக் காட்டாக, 'உனக்கு இப்படிப்பட்ட ஒரு வியாதி ஏற்பட்டிருக்கின்றது ஆனால் பயப்படாதே, நான் உனக்கு தரும் மாத்திரைகளை மறக்காமல், குறிப்பி டப்பட்ட நேரத்திற்கு எடுத்துக் கொள்' என்று வைத்தியர் கூறுவது ண்டு. அவர் கொடுக்கும் மாத்தி ரைகளும் சில வேளைகளிலே நம க்கு மிகவும் கசப்புள்ளதாக இரு க்கும் அல்லவா. சிலர் அந்த மாத் திரை கசப்பாக இருக்கின்றது என்று உட்கொள்ளாமல் வியாதி மோச டைவதற்கு தங்களை ஒப்புக் கொடுத்துவிடுகின்றார்கள். அதுபோலவே, வேத த்தின் தியானம், உங்கள் மனதிற்கு கடிமானதாக இருக்கின்றது என்று உங்கள் செவியை அடைத்துப் போடாதிருங்கள். நாம், பிதாவா கிய தேவனை அப்பா பிதாவே என்று அழைக்கும் பாக்கியத்தை பெற் றிருக்கின்றோம். எனவே, நாம் இந்த உலகிலே இருக்கும் மற்றைய உயி ரினங்களைப் போன்றவர்கள் அல்ல. நாம் மிருகங்களுக்கு ஒத்தவர்கள் அல்ல, நாம் தேவனுடைய பிள்ளைகளாக அழைக்கப்பட்டிருக்கின்றோம். எனவே, நாம் தேவ பிள்ளைகளுக்குரிய கீழ்படிவையும், மனத்தாழ்மை யையும் உடையவர்களாக வாழவேண்டும். சில வேளைகளிலே, குதிரை களும், கோவேறு கழுதைகளும் தங்கள் எஜமானனுக்கு அடங்காமலும், அவைகளின் கிட்டே யாரும் சேரமுடியாமலும் புத்தியற்றதாக குழப்பம் விளை விப்பதுண்டு. அப்படிப்பட்ட மிருகங்களை, வாரினாலும் கடிவாள த்தினாலும் அவைகளின் வாய்களை கட்டிப்போடுகின்றார்கள். பிள்ளை களாகிய நாம், இப்படிப்பட்ட புத்தியற்றதும், அடங்காததுமுமான குதிரைகள், கோவேறு கழுதைகளைப் போல இருக்க வேண்டாம் என்று பரி சுத்த வேதாகமத்தின் சங்கீதப் புத்தகதிலே 32ம் அதிகாரத்தில் வாசிக்கின்றோம். பிரியமானவர்களே, இது என்னுடைய வாழ்க்கை, என் மனம் விரும்பிய பிரகாரமாக வாழ்ந்து கொள்வேன் என்று உங்களுக்கு கொடு க்க ப்படும் போதனைகளை கேளாமல், உங்கள் மனதை கடினப்படுத்தாதிருங்கள். கர்த்தருக்கு முன்பாக உங்களை தாழ்த்துங்கள். அவர் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கின்றார். தாழ்மையுள்ளவர்க ளுக்கு கிருபையளிக்கின்றார். வார், கடிவாளம் போன்றவைகள் பிள்ளைகளுக்கு ஏற்றதல்ல. தேவனுடைய கரம் உங்கள்மேல் பாரமாகயிராதடிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.

ஜெபம்:

நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; என்று சொன்ன தேவனே, உம்முடைய சத்தத்தை கேட்டு உம்முடைய வழியிலே நடக்க என்னை பெலப்படுத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபிரெயர் 3:14